சிறப்பு பகுதிகள்

சொல்கிறார்கள்

நாம் தேடுவது நம்மை வந்து சேரும்!

Added : பிப் 20, 2021
Share
Advertisement
நாம் தேடுவது நம்மை வந்து சேரும்!சினிமாவில் நுழைய வேண்டும் என்பதற்காக, பல ஆண்டுகளாக, தான் பட்ட சிரமங்களை கூறும் நடிகர், இயக்குனர் சமுத்திரகனி: சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம் சேத்துார். நடிகனாக வேண்டும் என்பதற்காகத் தான், சென்னைக்கு வந்தேன். அதற்காக எல்லாரும், என்னென்ன செய்வரோ அத்தனையும் செய்தேன். முகபாவனையை விதவிதமாக மாற்றி, ஏராளமான போட்டோக்களை எடுத்துக்

சொல்கிறார்கள்


நாம் தேடுவது நம்மை வந்து சேரும்!சினிமாவில் நுழைய வேண்டும் என்பதற்காக, பல ஆண்டுகளாக, தான் பட்ட சிரமங்களை கூறும் நடிகர், இயக்குனர் சமுத்திரகனி: சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம் சேத்துார். நடிகனாக வேண்டும் என்பதற்காகத் தான், சென்னைக்கு வந்தேன். அதற்காக எல்லாரும், என்னென்ன செய்வரோ அத்தனையும் செய்தேன். முகபாவனையை விதவிதமாக மாற்றி, ஏராளமான போட்டோக்களை எடுத்துக் கொண்டேன். நிறைய சினிமா கம்பெனிகளில் ஏறி, இறங்கினேன். சில கம்பெனிகளில், சினிமா காட்சிகளை நடித்தும் காட்டிஉள்ளேன்.நகைச்சுவை நடிகராக வர வேண்டும் என்பதற்காகத் தான் வந்தேன். நானும் அந்த காட்சிகளைத் தான் நடித்து காண்பிப்பேன். சினிமா கம்பெனியில் இருக்கும் பலரும், அதை ரசித்து பார்ப்பர்; சிரித்து மகிழ்வர்.

நடித்து முடித்து, வெளியேறும் போது, 'இவனும், மூஞ்சியும், நடிக்க வந்துட்டான் பாருங்க' என்பர்.ஒரு பிரபல இயக்குனரிடம், நடிக்க வாய்ப்பு கேட்டு, என் புகைப்படத்தை கொடுக்கும் போது, கையெழுத்து போட்டு கொடுத்தேன். என் கையெழுத்து அழகாக இருந்ததால், 'வசனங்களை காப்பிரைட் பண்ண வாரீங்களா' என கேட்டார்.நடிகனாக வேண்டும் என்ற ஆசை நிறைவேறவில்லை. அவமானங்களையும், அசிங்கங்களையும் சந்தித்தேன். இனிமேல் நடிகனாக முயற்சிக்கக் கூடாது என நினைத்து, எடுத்து வைத்திருந்த, போட்டோக்கள் அத்தனையையும் கிழித்து வீசினேன். உதவி இயக்குனராக, முயற்சியை துவக்கினேன்.உதவி இயக்குனராக, 16 ஆண்டுகள், இருந்த பிறகு தான், நடிக்க வாய்ப்பு வந்தது. ஒரு விஷயத்தை நாம் தேடி வருவோம். அது கிடைக்கவில்லை என்றால், அதற்காக மனம் வெறுத்துவிடக் கூடாது. நாம் விரும்பிய துறைக்கு பக்கத்திலேயே, ஏதாவது ஒன்றில் இருக்க வேண்டும். அப்படி இருக்கும் போது, நாம் எதை தேடி வந்தோமோ, அது தானாக நம்மை வந்து சேரும்.

அது நம்மை தேடிவரும் போது, அதை ஏற்கும் தகுதியை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.என் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு சம்பவம் என்றால், அது, என் தந்தையின் திடீர் மரணம் தான். சினிமாவில் நடிக்க வேண்டும் என, 10ம் வகுப்பு படிக்கும் போதே ஓடி வந்துவிட்டேன். அப்போது என் அப்பா சொன்னது, 'நான் இருக்கேன்; தைரியமா டிரை பண்ணுடா. ஆனா, படிச்சுடு'ன்னு சொன்னார்.அவர் இருக்கார் என்ற தைரியத்தில் நான், வேறு பக்கமாக ஓடிக் கொண்டிருந்தேன். திடீரென இறந்து விட்டார். என் ஒவ்வொரு வளர்ச்சியையும், அவர் இருந்திருந்தால் ரசித்து பார்த்திருப்பார். இப்போது, ஒவ்வொரு மேடைகளும், அங்கு கிடைக்கும் பாராட்டுகளையும், கவுரவங்களையும் பார்க்க, அப்பா இல்லையே என, நான் வருந்தாத நாட்களே இல்லை!


அனைவரும் பரதம் பயிலலாமே!கோவை, ராமநாதபுரத்தில்,'மயூரம்' என்ற பெயரில் இசை மற்றும் நடனப் பள்ளியை நடத்தி வருவது பற்றி, இந்த துறையில், 19 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த நடன ஆசிரியை துர்காலட்சுமி: தமிழினத்தின் பாரம்பரிய கலைகளில் ஒன்று பரதம். இந்த கலை, 2,000 ஆண்டுகளுக்கு முன் தோன்றியது. சதிராட்டம், ஆடல், நாட்டியம் என, பல பெயர்களால் அழைக்கப்பட்ட இந்த நடனம், பரத நாட்டியம் என, இப்போது அழைக்கப்படுகிறது.இந்த பரத நாட்டியத்தை சரியாக செய்யும் போது, யோகாசனம் செய்யும் பலன்கள் கிடைக்கும். இதைத் தொடர்ந்து செய்வதன் மூலம், உடல் வலிமை பெறும். அசைவுகள், அதன் பெயர்கள், ஜதி என, அனைத்தையும் நினைவு கொள்ளும் செயல்திறனால், மூளையின் திறன் அதிகரிக்கும். எந்தவொரு செயலிலும் தன்னம்பிக்கையுடன் இறங்கும் தைரியத்தை கொடுக்கும்.பரதம் பயில்பவர்களுக்கு நேர்த்தி என்பது இயல்பாகவே வந்து விடும். எந்த செயலையும் அவர்கள் நேர்த்தியாக செய்வர்.மேலும், பரதம் கற்றுக் கொள்ளும் ஆண், பெண்கள் சுறுசுறுப்பாக இருப்பர். பரதம் மட்டுமின்றி எந்தவொரு நடனத்தின் வேகமான அசைவின் போதும், உடல் முழுக்க துாண்டப்படும் ரத்த ஓட்டம், இதய ஆரோக்கியத்திற்கு கைகொடுக்கும்.மேலும், பரதம் கற்றுக் கொள்பவர்கள் நீடித்த இளமையுடன் இருப்பர். அவர்களிடம் அழகுணர்ச்சி அதிகரிக்கும். அதிக எடையில் இருந்தால் மெலிவர். சீரான உடல் எடை அவர்களுக்கு வாய்க்கும். அவர்களின் உடல் கட்டுக்கோப்பாக இருக்கும். பரதக் கலைஞர்களின் முகம் அழகாக இருக்கும். கண்களை அடிக்கடி அசைப்பது; புருவத்தை அசைப்பது போன்றவற்றால் புருவம், கண்கள், கழுத்து, உதடுகள் போன்றவற்றிற்கு தேவையான பயிற்சிகள் கிடைப்பதால், அந்த பாகங்கள் அழகுறும். பரதம் கற்றுக் கொள்ள வயது ஒரு தடையில்லை. 40 வயதில் கூட கற்றுக் கொள்ளலாம். மன அமைதி, சந்தோஷம், ஆத்ம திருப்தி கிடைக்கும். மனம் விரும்பும் வரை, உடலுக்கு முடியும் வரை ஆடலாம்.
எனவே, சிறு வயதிலிருந்தே பெண் குழந்தைகள் பரதம் கற்றுக் கொள்ளவேண்டும். அவ்வாறு கற்றால், எலும்புகள் வலுவடையும். தசைகள் நெகிழ்வுதன்மையுடன் இருக்கும். பருவம் எய்தி, திருமணமாகி, குழந்தை பேற்றின் போது, சுக பிரசவத்திற்கான வாய்ப்பு பரதக் கலைஞர்களுக்கு அதிகம். முக்கியமாக நடனம் ஆடும்போது, கைகள், கால்கள், கண்கள், உடல் என, அனைத்தும் ஒன்றுடன் ஒன்று ஒருங்கிணைந்து இயங்கும் போது, உடலின் வலு எனப்படும், 'ஸ்டெமினா' அதிகரிக்கும். எனவே, ஆண், பெண் இருபாலரும் பரத நாட்டியம் பயில வேண்டும். அதனால் பல நன்மைகளை அடைய முடியும்!

Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X