ஊக்குவிக்க வேண்டும்!
நம் மொழியும், கலாசாரமும், நாணயத்தின் இரு பக்கங்கள் ஆகும். மொழியின் அழிவு என்பது, விலைமதிப்பற்ற மரபின் அழிவுக்கு வழிவகுக்கும். அதை நாம் நடக்கவிடக்கூடாது. நம் கலாசாரங்களை பாதுகாக்க, தாய் மொழிகளை ஊக்குவிக்கவேண்டியது அவசியமாகும்.
வெங்கையா நாயுடு
துணை ஜனாதிபதி
சமரசம் கிடையாது!
எதிர்க்கட்சி என்பதால் மட்டும், நாங்கள் அரசை எதிர்க்க வில்லை. சாமானிய மக்களை பாதிக்கும் வகையில், மத்திய அரசு அறிமுகம் செய்யும் தவறான கொள்கைகள் காரணமாகவே எதிர்க்கிறோம். அதுபோன்ற விஷயங்களில் என்றும் சமரசம் செய்யமாட்டோம்.
மல்லிகார்ஜுன கார்கே
ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர், காங்.,
தவறான கொள்கை!
பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள், கடந்த, 11 நாட்களாக, உயர்ந்து வருகின்றன. இதனால், சாமானிய மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கைகள் காரணமாகவே, இது நடக்கிறது.
அசோக் கெலாட்
ராஜஸ்தான் முதல்வர், காங்.,
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE