வீடு கட்ட வேண்டும் என்ற ஆர்வம், ஆசை இருந்தும் பட்ஜெட் குறித்த கவலை நமக்குள் எப்போதும் இருந்து கொண்டே தான் இருக்கும்.
வீட்டு கட்டுமானத்தில் செலவை குறைக்கும் வழிமுறைகளை தெளிவாக தெரிந்து கொண்டு பணிகளை துவங்குவது நல்லது. இன்றைய கட்டுமான தொழில்நுட்ப வளர்ச்சியில் ஆற்று மணல், செங்கல், கம்பிகள் இல்லாமல் கூட ஒரு வீட்டை, பிற கட்டுமானத்தை கட்டமைக்க முடியும். இவை மூன்றும் தான் கட்டுமானத்தின் முக்கிய பங்கு வகிக்கும் பொருட்கள் என்றாலும் இதை தவிர்த்து கட்டமைக்க பல வசதிகள் இன்று வந்து விட்டன. இதனால் கட்டுமான செலவும் கணிசமாக குறையும்.
தரமான எம் சாண்ட் கட்டுமானத்திற்காக ஆற்று மணலை எடுத்து இயற்கை வளத்தை குறைப்பதற்கு பதில் செயற்கை மணலான எம் சாண்ட் பயன்படுத்தலாம். பாறைகளில் இருந்து எடுக்கப்படும் இந்த எம் சாண்ட் மணல் தான் தற்போது கட்டுமானங்களுக்கு அதிகம் பயன்படுத்துகிறார்கள். இதுவும் ஆற்று மணல் போல் உறுதியான கட்டுமானம் கட்ட உதவும். இது குறித்த சந்தேகம் மக்களிடம் இருக்க தான் செய்கிறது. எனவே, பயமின்றி இதை பயன்படுத்தலாம்.
ஆங்கிலேயர் வருகைக்குப் பின்னர் தான் நம்முடைய கட்டுமான முறை மாறிவிட்டது. அவர்களின் வருகைக்கு முன்பு வரை களிமண் சுவர், குறைவான மணல், பாறைகள், சுண்ணாம்பு, முட்டை போன்ற பொருட்கள் தாம் நம் கட்டுமானத்தில் முக்கிய பங்கு வகித்தன. ஆனால், ஆங்கிலேயர்கள் வருகைக்குப் பின் 'இங்கிலிஷ் பாண்டு' என்ற கட்டட முறைதான் தற்போது வரை பின்பற்றப்பட்டு வருகிறது.
இந்த வகையான கட்டிட முறையில் அதிக மணல் தேவைப்படும்.பிளை ஆஷ் செங்கல் ஆற்று மணலுக்கு பதில் எம் சாண்ட் பயன்படுத்துவது போல் செங்கலுக்கு பதில் பிளை ஆஷ் செங்கல் என்ற சிமென்ட் செங்கலை பயன்படுத்தலாம். செங்கல் தயாரிக்க அதிக மணல் பயன்படுத்தப்படுவதுடன் அதை சூளையில் வைத்து சுட்டு உறுதியாக மரங்கள் வெட்டப்படும். வெட்டிய மரத் துண்டுகளை தண்ணீரில் ஊற வைக்க வேண்டியிருப்பதால் நீர் வீணாகும். அதனால், பிளை ஆஷ் பயன்படுத்தி சுற்றுச்சூழல் காக்கலாம். கட்டுமானமும் உறுதியாகவே இருக்கும்.
ஆத்தங்குடி கற்கள் வழக்கமான கான்கிரீட் தளங்கள் அமைக்கும் போது நெருக்கமாக கம்பிகள் அமைக்கப்படும். இதற்கு அதிக கம்பிகள் தேவை. இதனை தவிர்க்க பானை, தேங்காய் ஓடுகளை பயன்படுத்தி கான்கிரீட் தளம் அமைக்கலாம். பின்னல் வலை போல் கம்பிகள் அமைப்பதற்கு பதில் பானை, தேங்காய் ஓடுகளை வைத்து இடையில் கம்பிகளை பொருத்தி அமைக்கலாம். இதனால், கம்பிகள் குறைவாக இருந்தால் போதும். மார்பிள், மொசைக், டைல்ஸ் கற்களுக்கு பதில் ஆத்தங்குடி கற்களை பயன்படுத்தினால் பார்க்க அழகாக இருப்பதோடு நம் ஆரோக்கியமும் அதிகரிக்கும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE