பொது செய்தி

இந்தியா

இயல்பு நிலைக்கு திரும்பும் விமான போக்குவரத்து துறை!

Added : பிப் 20, 2021
Share
Advertisement
கொரோனா பரவலால், கடந்த எட்டு மாதங்களாக சுதந்திரமாக பறக்க முடியாமல் தவித்து வந்த விமானத் துறை, தற்போது தொற்றுநோய் பரவல் குறைந்து வருவதை அடுத்து, இயல்பு நிலைக்கு திரும்பி வரத் துவங்கியுள்ளது.நம் நாட்டில், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, கடந்த ஆண்டு மார்ச், 25ம் தேதி முதல், விமான சேவைகள் நிறுத்திவைக்கப்பட்டன. இதையடுத்து, உள்நாட்டு விமான சேவை மட்டும் துவங்கப்பட்டது.
 இயல்பு நிலைக்கு திரும்பும் விமான போக்குவரத்து துறை!

கொரோனா பரவலால், கடந்த எட்டு மாதங்களாக சுதந்திரமாக பறக்க முடியாமல் தவித்து வந்த விமானத் துறை, தற்போது தொற்றுநோய் பரவல் குறைந்து வருவதை அடுத்து, இயல்பு நிலைக்கு திரும்பி வரத் துவங்கியுள்ளது.

நம் நாட்டில், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, கடந்த ஆண்டு மார்ச், 25ம் தேதி முதல், விமான சேவைகள் நிறுத்திவைக்கப்பட்டன. இதையடுத்து, உள்நாட்டு விமான சேவை மட்டும் துவங்கப்பட்டது.


வளர்ச்சி

வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களை அழைத்து வர, 'வந்தே பாரத்' திட்டத்தின்கீழும், ஒப்பந்தம் அடிப்படையிலும், சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பல மாதங்களுக்குப் பின், விமானத் துறை, தற்போது, இயல்பு நிலைக்கு திரும்பி வரத் துவங்கி உள்ளது.

கடந்த, 13ம் தேதி நிலவரப்படி, உள்நாட்டில், 2,308 விமான சேவைகள் மூலம், மூன்று லட்சத்து, 10 ஆயிரத்து, 387 பேர் பல ஊர்களுக்கு பயணம் செய்துள்ளனர். இது, கொரோனா காலத்திற்கு முந்தைய உள்நாட்டு விமான போக்குவரத்தில், அன்றாட சராசரி பயணியரில், 77.6 சதவீதம்; தினசரி விமான சேவையில், 79.5 சதவீதம் ஆகும்.

கடந்த ஜனவரியில், இன்டிகோ, கோஏர், ஏர் இந்தியா, விஸ்டாரா, ஏர் ஏஷியா இந்தியா, ஸ்பைஸ் ஜெட் ஆகிய ஆறு விமான நிறுவனங்கள், 65 - 70 சதவீத பயணிகளுடன் போக்குவரத்து மேற்கொண்டு உள்ளன. இதில், குறைந்த கட்டணம் வசூலிக்கும், இன்டிகோ நிறுவனம் மட்டும், அதிகப்பட்சமாக, 42 லட்சம் பயணியரை கையாண்டுள்ளது.கடந்த, 2019 டிசம்பருடன் ஒப்பிடும் போது, 2020, டிசம்பரில், உள்நாட்டு விமானங்கள், 58 சதவீத பயணியரை கையாண்டுள்ளன.

கடந்த சில வாரங்களாக, உள்நாட்டு விமான போக்குவரத்து வளர்ச்சி கண்டு வருவது தெரிகிறது. எனினும், நாட்டின் பல்வேறு நகரங்களை இணைக்கும், சர்வதேச விமான போக்குவரத்துதான், உள்நாட்டு விமான சேவையின் வளர்ச்சிக்கு உதவும்.விமான கட்டண வரம்பு, வரும், மார்ச், 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அடிப்படை மற்றும் வரம்பு கட்டணங்களை, இந்திய விமான போக்குவரத்து ஆணையம் உயர்த்தியுள்ளது. இது, இக்கட்டணங்களுக்கு மேல் குறிப்பிட்ட தொகையை உயர்த்திக் கொள்ளும் வாய்ப்பை, விமான நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளது.


எதிர்பார்ப்பு

அதுபோல, கடந்த ஆண்டு கோடையில் விமான நிறுவனங்கள் கையாண்ட பயணியரில், 80 சதவீத அளவிற்கு தற்போது கையாள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த இரு அம்சங்களும், உள்நாட்டு விமான போக்குவரத்து துறை, எழுச்சி காண வழி வகுத்துள்ளது.

விமான போக்குவரத்து துறை அமைச்சர், ஹர்தீப் புரி, சமீபத்தில், 'கோடை காலத்தை முன்னிட்டு, வரும் வாரங்களில், உள்நாட்டு விமான கட்டண வரம்பு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் நீக்கப்படும்' என, அறிவித்திருப்பது கவனிக்கத்தக்கது. அதனால், உள்நாட்டு விமான சேவை விரைவில் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
-நமது சிறப்பு நிருபர்-

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X