பொது செய்தி

இந்தியா

இந்தியா -ஜப்பான் இடையிலான உறவு: தமிழகத்திலும் குவிகின்றன முதலீடுகள்

Updated : பிப் 22, 2021 | Added : பிப் 20, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
இந்தியா - -ஜப்பான் இடையிலான நல்லுறவு, வரும் ஆண்டுகளில் பல மடங்கு அதிகரிக்க உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. நம் நாட்டின் பொருளாதார கொள்கைகளை வகுக்கும் நிபுணர்கள், தொழில் துறை வல்லுனர்கள் முன்னிலையில், சமீபத்தில் பேசியபோது, இந்தியாவுக்கான ஜப்பான் துாதர் சடோஷி சுசுகி இதை உறுதிப்படுத்தினார்.கிழக்கு ஆசிய நாடான, ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவுக்கு, நம் நாட்டின்
இந்தியா, ஜப்பான் ,  தமிழகம் , முதலீடுகள், உறவு

இந்தியா - -ஜப்பான் இடையிலான நல்லுறவு, வரும் ஆண்டுகளில் பல மடங்கு அதிகரிக்க உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. நம் நாட்டின் பொருளாதார கொள்கைகளை வகுக்கும் நிபுணர்கள், தொழில் துறை வல்லுனர்கள் முன்னிலையில், சமீபத்தில் பேசியபோது, இந்தியாவுக்கான ஜப்பான் துாதர் சடோஷி சுசுகி இதை உறுதிப்படுத்தினார்.


கிழக்கு ஆசிய நாடான, ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவுக்கு, நம் நாட்டின் உயரிய கவுரவமான, பத்ம விபூஷண் விருதை, மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது. 'இந்தியா - ஜப்பான் நல்லுறவு வலுப்பெறுவதற்கு, அவரது ஆட்சிக் காலத்தில் அளிக்கப்பட்ட பேராதரவை கவுரவிக்கும் வகையில், இந்த விருது அறிவிக்கப்பட்டது என்பதில் துளியும் சந்தேகமில்லை' என, வெளியுறவுத் துறை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

அவரது ஆட்சிக் காலத்தில், நாற்கர பாதுகாப்பு பேச்சில், ஜப்பானுடன் இணைந்து இந்தியா பணியாற்றத் துவங்கியது. மேலும், இரு நாட்டுக்கு இடையிலான, சிறப்பு கூட்டமைப்பு ஒப்பந்தம், பிரதமர்கள் மட்டத்திலான மாநாடு, கையகப்படுத்துதல் மற்றும் பல்வேறு துறைகளுக்கு இடையிலான சேவை ஒப்பந்தம், சிவில் அணுசக்தி கூட்டு ஒப்பந்தம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. அவருக்கு பின், ஜப்பான் பிரதமராக பொறுப்பேற்றுள்ள யோஷிஹைட் சுகாவும், இரு நாட்டுக்கு இடையிலான உறவை வலுவடையச் செய்ய, சிறப்பு கவனம் செலுத்தி வருகிறார்.




மறுமலர்ச்சி



நம் நாட்டில் அதிக முதலீடுகளை செய்துள்ள பெரிய நாடுகளின் பட்டியலில், ஜப்பான் நான்காவது இடத்தை வகிக்கிறது. 15 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் இங்கு செய்யப்பட்டுள்ளன. இதன் வாயிலாகவே, இந்தியா - ஜப்பான் இடையிலான பொருளாதார உறவை கணித்துவிட முடியும். இந்த உறவு, கொரோனா பெருந்தொற்று காலத்துக்கு பின், மேலும் வலுவடைந்துள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக, நம் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்தது. பல்வேறு துறைகளும் தத்தளிக்கத் துவங்கின. இந்த நேரத்தில், நம்முடனான தொழில் முதலீட்டு ஒப்பந்தங்களை ஜப்பான் புதுப்பிக்கத் துவங்கியது; இந்த நடவடிக்கைகள், நம் பொருளாதார சீரமைப்பில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.

பல்வேறு மாநிலங்களிலும், ஜப்பானிய தொழில் துறை நகரங்களை உருவாக்குவது, 'ஸ்டார்ட் அப்' எனப்படும், புதிய சிந்தனைகளை ஊக்குவிக்கும் நிறுவனங்களை துவங்குவது, உற்பத்தி முதலீட்டு ஊக்கத்தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை, இரு நாடுகளும் செயல்படுத்தி வருகின்றன.கொரோனாவுக்கு பிறகான, நம் நாட்டின் முதலீட்டு தேவைகளை புரிந்து, இங்கு முதலீடுகளை ஜப்பான் அதிகரித்து வருகிறது. மஹாராஷ்டிராவின் மும்பை - குஜராத்தின் ஆமதாபாத் இடையே, 508 கி.மீ., தொலைவுக்கு, 90 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில், 'புல்லட்' ரயில் சேவை அமைக்கும் பணி, 2017ல் துவங்கப்பட்டது.




உள்கட்டமைப்பு வசதி




மேலும், அண்டை நாடான வங்கதேசம், மியான்மர் மற்றும் சில ஆப்ரிக்க நாடுகளில், இந்தியா - ஜப்பான் கூட்டாக, பல உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கி வருகின்றன. தொழில் துறை கொள்கைகள் மற்றும் திட்டங்களை வகுக்கும் நிபுணர்கள், தொழில் துறை தலைவர்கள் முன்னிலையில், இந்தியாவுக்கான ஜப்பான் துாதர் சடோஷி சுசுகி, சமீபத்தில் உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது:இந்தியாவின் உற்பத்தி துறையை வலுப்படுத்துவதற்காக, அரசுடன் இணைந்து ஜப்பான் செயல்பட்டு வருகிறது. சர்வதேச பொருளாதார சந்தையில், இந்தியா முக்கிய பங்கு வகிக்க, இது உதவும் என எதிர்பார்க்கிறோம்.இந்தியாவின் வெளிநாட்டு சந்தை உறவுகளை வலுப்படுத்தும் முயற்சியில், 'ஜெட்ரோ' எனப்படும், ஜப்பான் வெளியுறவு வர்த்தக அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்தியா - ஜப்பான் இடையிலான வர்த்தக உறவு, வரும் காலங்களில் பல மடங்கு உயரும். இவ்வாறு அவர் பேசினார்.




தமிழக உறவு



தமிழகத்தில், 600க்கும் மேற்பட்ட ஜப்பானிய நிறுவனங்கள் இயங்குவதாக, புள்ளி விபரம் தெரிவிக்கிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 13 ஆயிரத்து, 500 கோடி ரூபாய் நேரடி முதலீட்டை, ஜப்பான் செய்துள்ளது. இந்தியாவில் செய்யப்பட்டுள்ள முதலீட்டில் இது, 9.22 சதவீதம் என மதிப்பிடப்பட்டுள்ளது.உற்பத்தி துறையில், ஜப்பானைச் சேர்ந்த, 20 சதவீத நிறுவனங்கள் தமிழகத்தில் செயல்பட்டு வருகின்றன. நாடு முழுதும் உள்ள, 12 ஜப்பான் தொழில் துறை நகரங்களில், மூன்று நகரங்கள் தமிழகத்தில் உள்ளன.

ஆட்டோமொபைல் மற்றும் உதிரி பாகங்கள் தயாரிப்பில் துவங்கிய முதலீடுகள், தற்போது உணவு, ஜவுளி, தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளிலும், தங்கள் பங்கை ஜப்பான் விரிவுபடுத்தி வருகிறது.தமிழகத்தில், சிறு மற்றும் நடுத்தர தொழில் துறைகளுக்கு பெரிய வாய்ப்புகள் இருப்பதால், அதில் அதிக கவனம் செலுத்த, ஜப்பான் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. பொருளாதார உறவை வலுப்படுத்துவதை தாண்டி, திறன் மேம்பாட்டை வளர்ப்பதிலும் ஜப்பான் கவனம் செலுத்தி வருகிறது.டில்லி, மும்பை, பெங்களூரு, சென்னை உட்பட பல்வேறு நகரங்களில், ஜப்பான் மொழி கற்பிக்கும் மையங்களை அந்நாடு அமைத்துள்ளது. இதன், எட்டாவது கிளை, தமிழகத்தின் சேலம் நகரில் தற்போது துவங்கப்பட்டுள்ளது. 'நம் இளைய தலைமுறையினருக்கு ஜப்பானில் வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தரவும், இத்திட்டங்கள் வழிவகுக்கும்' என, நிபுணர்கள் கருதுகின்றனர்.

- நமது சிறப்பு நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Madhusoodhana Ramachandran - Chennai,இந்தியா
21-பிப்-202119:48:01 IST Report Abuse
Madhusoodhana Ramachandran இந்த செய்தி சைடாலினுக்கு பாவம் ஒரு இடி யான செய்தி.கப்ஸா ப்ராஸந் கிஷோருக்கு ஒரு மாற்று செய்தி தயாரிக்க வேண்டும்.
Rate this:
Cancel
Madhusoodhana Ramachandran - Chennai,இந்தியா
21-பிப்-202119:44:40 IST Report Abuse
Madhusoodhana Ramachandran மற்ற நாடுகளை ஒப்பிட்டு பார்க்கும் பொது தற்போதய மத்திய அரசசின் தலைமை பொருளாதாரத்தய் வெகு சீக்கிரமே முன்னேற்ற பாதையில் நடத்தி கொண்டு வருகிறது. இது மற்ற நாடுகளால் போரற்ற பட்டாலும் இஙகுள்ள அயல் நட்டு ரசிக அரசியல் வாதிகளுக்கு எடுத்து சொல்ல மனம் இல்லை.
Rate this:
Cancel
Madhusoodhana Ramachandran - Chennai,இந்தியா
21-பிப்-202119:39:55 IST Report Abuse
Madhusoodhana Ramachandran இதுபோன்ட்ர செய்திகள் மற்ற தினசரிகளை( நாடு நிலை என்றால் என்ன என்பது காசுக்கு கூவுவது என்று நினைக்கும்) ஊடகங்களும் போடாது.எங்கேயாவது பெண்கள் பின்னால் சுற்றி அவர்கள் செய்திகளையும் அவர்களின் ஒப்பற்ற தலைவர் பற்றியும் பிரசுரிக்கும். வான்க்கோழி தலையை மண்ணுக்குள் புதைத்து கொண்ட கதை அது போல் நினைத்து கொண்டிருக்கும் மனமுடைய தங்கள் செய்திகளையே மக்கள் நம்பவேண்டும் என்று நினைக்கின்ற உண்மைக்கு புறம்பாக சேய்திகள் வெளியிடும் ஏமாற்றும் தன்மை. இப்போது மக்களிடம் வேலைக்காகாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X