புதுடில்லி:கடந்த நான்கு மாதங்களில், மாநில அரசுகளுக்கு, ஜி.எஸ்.டி., இழப்பீடாக, 1 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதாக, மத்திய நிதிஅமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி அமலாக்கம் காரணமாக, மாநில அரசுகளுக்கு ஏற்படும் இழப்பை, மத்திய அரசு ஈடு செய்து வருகிறது. இது குறித்து, மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை:மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி., இழப்பீடு வழங்குவதற்காக, மத்திய அரசு, சிறப்பு கடன் சாளர திட்டத்தின் கீழ், 4.83 சதவீத வட்டி விகிதத்தில், 1 லட்சம் கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளது.
அதில், 2020 அக்., முதல், இதுவரை, 23 மாநிலங்களுக்கு, 91 ஆயிரத்து, 460 கோடி ரூபாய் வழங்கப் பட்டு உள்ளது. டில்லி, ஜம்மு - காஷ்மீர், புதுச்சேரி யூனியன் பிரதேசங்களுக்கு, 8,539 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த வகையில், மதிப்பீடு செய்யப்பட்ட, மொத்த ஜி.எஸ்.டி., இழப்பீட்டில், 91 சதவீத தொகை வழங்கப்பட்டு விட்டது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE