சிறிதும் தொய்வின்றி தேர்தல் பணி பா.ஜ., அமைப்பு செயலர்கள் உறுதி

Added : பிப் 20, 2021
Share
Advertisement
விரைவில் நடைபெற உள்ள, ஐந்து மாநில சட்டசபை தேர்தல்களில், சிறிதும் தொய்வின்றி களப்பணியாற்ற வேண்டும் என, அமைப்பு செயலர்களுடன், பா.ஜ., மேலிடம் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப் பட்டு உள்ளது.பா.ஜ.,வில், பல்வேறு முக்கிய பதவிகள் இருக்கும் நிலையில், அதன் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்., மற்றும் கட்சி இடையே, முக்கிய விஷயங்களில் பாலமாக செயல்படுவது, அமைப்பு செயலர் பதவி

விரைவில் நடைபெற உள்ள, ஐந்து மாநில சட்டசபை தேர்தல்களில், சிறிதும் தொய்வின்றி களப்பணியாற்ற வேண்டும் என, அமைப்பு செயலர்களுடன், பா.ஜ., மேலிடம் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப் பட்டு உள்ளது.

பா.ஜ.,வில், பல்வேறு முக்கிய பதவிகள் இருக்கும் நிலையில், அதன் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்., மற்றும் கட்சி இடையே, முக்கிய விஷயங்களில் பாலமாக செயல்படுவது, அமைப்பு செயலர் பதவி தான்.இந்த அமைப்பு செயலர் களின் ஆலோசனைக் கூட்டம், அதன் தேசிய பொதுச் செயலர் சந்தோஷ் தலைமையில், டில்லி பா.ஜ., தலைமை அலுவலகத்தில் நடந்தது.

இதில், ஐந்து மாநில தேர்தல் பிரசாரம் தொடர்பாக, சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு உள்ளன. அது குறித்து, தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது:தமிழகம், கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்கம், அசாம் சட்டசபை தேர்தல்களுக்கு, கட்சியை முழுவீச்சில் தயார்படுத்துவது குறித்து, முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டது.

சட்டசபை தேர்தல்கள் மட்டுமின்றி, அந்தந்த மாநில இடைத்தேர்தல்கள், உள்ளாட்சித் தேர்தல்களிலும், சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என, முடிவெடுக்கப்பட்டது.சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில், அசாமில் மட்டுமே பா.ஜ., ஆட்சி உள்ளது. அங்கு, மீண்டும் ஆட்சி அமைக்க முழு முயற்சி எடுக்க வேண்டும் என, முடிவெடுக்கப்பட்டது.

இம்முறை, மேற்கு வங்கத்தில் ஆட்சிக் கட்டிலை நெருங்கும் நிலை உள்ளது. மற்ற மாநிலங்களில் அதுபோன்ற நிலை இல்லாவிட்டாலும், அங்கு, பா.ஜ., மாபெரும் சக்தியாக உருமாறும் வாய்ப்பிருப்பதாக, மேலிட தலைவர்கள் கருதுகின்றனர்.இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், பா.ஜ., அமைப்பு செயலர்கள் கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி இன்று உரையாற்ற உள்ளார். இதில், மாநில பா.ஜ., தலைவர்களும் பங்கேற்பர் என, எதிர்பார்க்கப் படுகிறது. இக்கூட்டத்தில், ஐந்து மாநில தேர்தல் பிரசாரம் குறித்து, மேலும் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என, தெரிகிறது. அதேநேரம், அசாம் மற்றும் மேற்கு வங்கத்தில் நாளை சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர், முக்கிய ரயில்வே திட்டங்களை துவக்கி வைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- நமது டில்லி நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X