வீட்டு தோட்டம் அமைப்பதோடு கடமை முடிந்து விட்டது என பலரும் நினைக்கிறார்கள். அப்படி நினைத்தால் அது பலன் தராது.
ஆரம்பத்தில் எப்படி ஆர்வமாக தோட்டம் அமைத்தோமோ அதே போல் தினமும் முறைப்படி அதை பராமரிப்பதும் அவசியம்.வீட்டு வளாகத்தில் குறைந்த இடம் இருந்தால் இடத்தை ஆக்கிரமித்து வளரும் செடிகளுக்கு பதில் கொடி வகை செடிகளை படரவிடலாம். செடி தொட்டி வைக்கும் முன் அதன் அளவை விட பெரிய பாத்திரத்தை அடியில் வைக்க வேண்டும். தொட்டியில் இருந்து வழியும் தண்ணீர், மண் பாத்திரத்தில் விழும் போது சுத்தம் செய்ய எளிதாக இருக்கும். பயன்படாத, உடைந்த குடம், பாத்திரங்களை தொட்டிகளாக மாற்றி பயன்படுத்தலாம்.
வீட்டு செடிகளுக்கு தண்ணீரை ஸ்பிரே செய்தால் போதும்.பூக்கும் செடிகளுக்கு வெயில் அதிகம் தேவை என்பதால் பால்கனியில் வைக்கலாம். கொடிகளை பால்கனியை சுற்றி படரவிட்டால் பார்க்க அழகாக இருக்கும். வீட்டின் பின் துளசி, வாழை, காய்கறி பயிரிடலாம். தக்காளி, கத்திரி, வெண்டை, மிளகாய் செடிகளுக்கு குறைந்த இடமே போதும். தனி தொட்டிகளில் வைத்தால் நன்றாக வளரும்.வீட்டு முன் சின்னதாக இடம் இருந்தாலும் சைப்ரஸ், புத்தா பேம்பூ, ஆர்னமென்டல் குரோட்டன்ஸ் போன்ற அழகு தாவரங்களை வளர்க்கலாம்.
சுவற்றில் ஹேங்கிங் பாட்ஸ் உருவாக்கி, அஸ்பிராகஸ், டேபிள் ரோஸ் வளர்க்கலாம்.தொட்டியில் மண் நிரப்பும் போது ஆற்று மணல், செம்மண், தேங்காய்மட்டை கலக்க வேண்டும். தோட்டத்தில் குழி தோண்டி காய்கறி, பழங்களின் கழிவுளை நிரப்பி மூடி வைத்தால் 3 மாதங்களில் மக்கி இயற்கை உரமாக கிடைக்கும். பூச்சி தாக்காமல் இருக்க செடிகளில் வேப்பெண்ணெய் ஸ்பிரே செய்யலாம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE