மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல், சென்னை போயஸ் கார்டனில் உள்ள வீட்டில், நேற்று ரஜினியை சந்தித்தார்.
இன்று, கமல் கட்சியின், நான்காம் ஆண்டு துவக்க விழா, தாம்பரத்தில் நடக்கிறது. அதில் பங்கேற்க ரஜினிக்கு அழைப்பு வைக்கத்தான் கமல் போனார் என, மய்யம் தரப்பில் சொல்லப்படுகிறது. கட்சி ஆரம்பிக்கும் முடிவை கடைசி நிமிடத்தில் கைவிட்ட ரஜினியிடம், 'நீங்கள் செய்ய நினைத்ததை (மாற்றம்) நான் செய்ய விரும்புகிறேன். அதற்காக எனக்கு துணை நிற்பது உங்கள் கடமை. பிரசாரம் செய்ய வாருங்கள் என, அழைக்க மாட்டேன். ஆதரவாக குரல் கொடுங்கள் என்று கேட்கிறேன்' என, கமல் சொன்னதாக, இருவருக்கும் நெருக்கமான ஒரு பிரமுகர், நம் நிருபரிடம் தெரிவித்தார்.
'ரஜினியிடம், ஆதரவு கேட்பேன்' என, கமல் ஏற்கனவே கூறியிருந்தார். எனவே, அவர் கேட்டதில் ஆச்சரியம் இல்லை. ஆனால், ரஜினி என்ன பதில் சொன்னார் என்பது தெரியவில்லை. 'குரல் கொடுக்கிறேன் என்று கூறுவார்; கடைசி வரை கொடுக்கவே மாட்டார்' என்று கசப்பில்லாத குரலில், 'கமென்ட்' அடித்தார், ஒரு சினிமா பிரபலம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE