பொது செய்தி

தமிழ்நாடு

இந்தாண்டு 'யு டியூபில்' வேத பாராயணம்

Added : பிப் 20, 2021
Share
Advertisement
சென்னை:திருவெண்காடு சுப்ரமணிய கனபாடிகள் வேத பாராயண சபா சார்பில், ஆண்டுதோறும், 10 நாட்கள் நடைபெறும் வேத பாராயணம், இந்த, 83ம் ஆண்டு, ஒரே நாளில், திருவெண்காட்டில், நாளை மறு தினம் நடைபெறுகிறது.சபா நிர்வாகிகள், சந்திரன், குப்புசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:கொரோனா பரவல் காரணமாக,வேத பாராயணத்தில் பக்தர்கள் கலந்து கொள்வதை தவிர்க்குமாறு

சென்னை:திருவெண்காடு சுப்ரமணிய கனபாடிகள் வேத பாராயண சபா சார்பில், ஆண்டுதோறும், 10 நாட்கள் நடைபெறும் வேத பாராயணம், இந்த, 83ம் ஆண்டு, ஒரே நாளில், திருவெண்காட்டில், நாளை மறு தினம் நடைபெறுகிறது.

சபா நிர்வாகிகள், சந்திரன், குப்புசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:கொரோனா பரவல் காரணமாக,வேத பாராயணத்தில் பக்தர்கள் கலந்து கொள்வதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.வழக்கம் போல், வடகுடி சங்கர ராம தீட்சிதர், செதலபதி சுப்ரமணிய கனபாடிகள் தலைமையில் அச்சித்ரா அஸ்வமேத பாராயணமும், குரு சிவாச்சாரியார் தலைமையில் அகோராஸ்த்ரம் உட்பட பல ஹோமங்களும், திருவெண்காடு ஸ்வேதாரண்யேஸ்வரர் கோவிலில், அகோரமூர்த்தி சன்னிதியில் நடைபெற உள்ளன.

'யுடியூப்' வாயிலாக, https://youtu.be/hb8Cr8xvRfk என்ற இணைப்பில், ஹோமங்களை தரிசிக்கலாம். இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X