கோர்ட் செய்தி

தமிழ்நாடு

கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் ரூ.26 கோடி விலக்கை எதிர்த்து வழக்கு

Added : பிப் 20, 2021
Share
Advertisement
சென்னை:கடல் நீரை குடிநீராக்கும் திட்ட பணிகளை மேற்கொள்ளும் கூட்டு நிறுவனங்களுக்கு, ஒப்பந்த பதிவு கட்டணத்தில் இருந்து, 26 கோடி ரூபாய் விலக்கு அளித்ததை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னையை சேர்ந்த சமூக சேவகரான, 'டிராபிக்'ராமசாமி தாக்கல் செய்த மனு:சென்னையை அடுத்த நெம்மேலியில், 1,689 கோடி ரூபாய் மதிப்பில், கடல் நீரை குடிநீராக்கும்,

சென்னை:கடல் நீரை குடிநீராக்கும் திட்ட பணிகளை மேற்கொள்ளும் கூட்டு நிறுவனங்களுக்கு, ஒப்பந்த பதிவு கட்டணத்தில் இருந்து, 26 கோடி ரூபாய் விலக்கு அளித்ததை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னையை சேர்ந்த சமூக சேவகரான, 'டிராபிக்'ராமசாமி தாக்கல் செய்த மனு:சென்னையை அடுத்த நெம்மேலியில், 1,689 கோடி ரூபாய் மதிப்பில், கடல் நீரை குடிநீராக்கும், இரண்டாவது திட்டத்துக்கான ஆலை, ௧௦.௫ ஏக்கர் நிலத்தில் கட்டப்படுகிறது.கடந்த, 2019 ஜூனில், முதல்வர் அடிக்கல் நாட்டினார்.பணி உத்தரவு வழங்கப்பட்டு, 18 மாதங்கள்ஆகியும்,இன்னும் முன்னேற்றம் இல்லை.

திட்டப் பணிகளை மேற்கொள்ளும், கோப்ரா நிறுவனமும், அதனுடன் கூட்டு சேர்ந்துள்ள, டெக்டான் நிறுவனமும், பதிவு செய்த ஒப்பந்தத்தை சமர்ப்பிக்க வேண்டும். ஆனால், இதுவரை இந்த கூட்டு நிறுவனங்களின் ஒப்பந்தம் பதிவு செய்யப்படவில்லை.பதிவு செய்வதற்கு, முத்திரை தாள் கட்டணம் மட்டும், 26.80 கோடி செலுத்தப்பட வேண்டும்.ஆனால், கட்டணத்துக்கு விலக்கு அளிக்க, கோப்ரா நிறுவனம் கோரியது.

இதையடுத்து, 26.80 கோடி ரூபாய் பதிவு கட்டணத்துக்கு விலக்கு அளித்து, நகராட்சி நிர்வாகத் துறை உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை, ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் கே.சக்திவேல் ஆஜரானார். மனுவுக்கு பதில் அளிக்கும்படி, தமிழக அரசுக்கும், தனியார் நிறுவனங்களுக்கும், 'நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை, கோடை விடுமுறைக்கு பின், நான்கு வாரங்களுக்கு தள்ளி வைத்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X