வடலுார் : 'தினமலர்' நாளிதழ் செய்தி எதிரொலியால் பாழடைந்த அரசு கட்டடம் துாய்மைப்படுத்தும் பணி நடந்தது.
வடலுாரில், அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனம், அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, மாவட்ட கல்வி அலுவலகம் ஆகியவை ஒரே வளாகத்தில் இயங்கி வருகின்றன.இந்த வளாகத்தில், ஆசிரியர் பயிற்சி நிறுவனத்திற்காக இயங்கிய கட்டடம் பயன்பாடு இன்றி, பாழடைந்து, புதர்கள் மண்டியிருந்தது.அந்த வளாகத்தில் விஷமிகள் சிலர், பகல் நேரங்களிலேயே மது அருந்துவது உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அரசு பள்ளிக்கு வரும் மாணவியர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது என 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது.
அதனைத் தொடர்ந்து, பாழடைந்த கட்டடங்களைச் சுற்றியுள்ள புதர்கள், நேற்று ஜே.சி.பி., இயந்திரம் மூலம் அகற்றி துாய்மைப்படுத்தும் பணி நடந்தது.இந்த வளாகத்தைச் சுற்றிலும் சுற்றுச்சுவர் கட்ட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE