பொது செய்தி

தமிழ்நாடு

வருவாய் துறை அலுவலர்கள்4வது நாளாக வேலைநிறுத்தம்

Added : பிப் 20, 2021
Share
Advertisement
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் வருவாய்துறை அலுவலர்கள் நேற்று 4வது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கம் சார்பில், புதிய ஓய்வூதியதிட்டம் ரத்து, கொரோனா காரணமாக நிறுத்திய அகவிலைப்படி, ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு பலன்கள் மீண்டும் வழங்க வேண்டும். காலிபணியிடங்களில் பதவி உயர்வு மூலம் நிரப்ப வேண்டும்ஆகிய 10 அம்ச கோரிக்கை

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் வருவாய்துறை அலுவலர்கள் நேற்று 4வது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கம் சார்பில், புதிய ஓய்வூதியதிட்டம் ரத்து, கொரோனா காரணமாக நிறுத்திய அகவிலைப்படி, ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு பலன்கள் மீண்டும் வழங்க வேண்டும். காலிபணியிடங்களில் பதவி உயர்வு மூலம் நிரப்ப வேண்டும்ஆகிய 10 அம்ச கோரிக்கை வலியுறுத்தி பிப்.,17 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுஉள்ளனர். நேற்று 4வது நாளாக பணிக்கு வராததால் மாவட்ட கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகம், சப்கலெக்டர் அலுவலகப்பணிகள், தேர்தல் பணி பாதிக்கப்பட்டுள்ளன. ராமநாதபுரம் வருவாய்துறை சங்கம் மாவட்டத் தலைவர் பழனிக்குமார் கூறுகையில், மாவட்டத்தில் 514 வருவாய்துறை அலுவலர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோம்.முதுகுளத்துாரில் வருவாய்துறை அமைச்சர் நிகழ்ச்சியையும் புறக்கணித்துள்ளோம். இன்று (பிப்.,21ல்) திருச்சியில் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம் நடக்கிறது. இதில் அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து அறிவிக்கப்படும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X