பரமக்குடியில் அறிவிக்கப்பட்ட மின் தடை ரத்து: கூலி தொழிலாளர்கள் -சிறு தொழில்கள் பாதிப்பு

Added : பிப் 20, 2021
Share
Advertisement
பரமக்குடி; பரமக்குடியில் நேற்று மின்வாரியத்தால் அறிவிக்கப்பட்ட மின் தடை ரத்து செய்யப்பட்டதால், சிறு தொழில்கள் மற்றும் கூலி தொழிலாளர்கள் பாதிப்புக்குள்ளாகினர்.காட்டு பரமக்குடி உப மின் நிலையத்திலிருந்து பரமக்குடி, எமனேஸ்வரம்,கமுதக்குடி, நயினார் கோவில் உள்ளிட்ட பகுதிகளுக்கு மின் சப்ளை செய்யப்படுகிறது. இங்கு மாதாந்திர பராமரிப்பு பணி செய்யும் போது நாளிதழ்களில்

பரமக்குடி; பரமக்குடியில் நேற்று மின்வாரியத்தால் அறிவிக்கப்பட்ட மின் தடை ரத்து செய்யப்பட்டதால், சிறு தொழில்கள் மற்றும் கூலி தொழிலாளர்கள் பாதிப்புக்குள்ளாகினர்.காட்டு பரமக்குடி உப மின் நிலையத்திலிருந்து பரமக்குடி, எமனேஸ்வரம்,கமுதக்குடி, நயினார் கோவில் உள்ளிட்ட பகுதிகளுக்கு மின் சப்ளை செய்யப்படுகிறது. இங்கு மாதாந்திர பராமரிப்பு பணி செய்யும் போது நாளிதழ்களில் அறிவிப்பு வெளியிட கொடுக்கின்றனர்.கட்டுமான தொழில் தொடங்கி சிறுதொழில் புரிவோர் மற்றும் மின்சாரத்தை நம்பி இயங்கும் தொழிலாளர்கள் பலரும் அன்றைய தினம் விடுமுறை அல்லது மாற்று பணிகளை ஒதுக்கி செல்கின்றனர்.ஆனால் மின்துறை இதுபோன்ற அறிவிப்புகளை வெளியிடும் பொழுது மின்சாரத்தை துண்டிக்காமல் திடீரென மின் துண்டிப்பு ரத்து செய்கின்றனர்.நேற்றும் பரமக்குடி பகுதியில் மின்தடை செய்யப்படாததால் சிறு தொழில்கள் பாதிக்கப்பட்டன. மின்துறை அறிவிப்பு வெளியிடும் நாட்களில் தங்களது பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கவேண்டும். இத்துடன் அறிவிக்கப்படாத நாட்களில் மின்தடை செய்வதாலும் தொழில்கள் பாதிக்கப்படுகின்றன.உதவி செயற்பொறியாளர் பாலமுருகன் கூறியபோது, நீதிமன்ற பணிகளுக்காக மின் துண்டிப்பு பரமக்குடியில் மட்டும் ரத்து செய்யப்பட்டது. மற்ற பகுதிகளில் வழக்கம்போல் பராமரிப்பு பணிகள் நடத்தப்பட்டன என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X