அரசியல் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க.,வினர் ஊர்வலம்

Added : பிப் 20, 2021
Share
Advertisement
கிள்ளை : கிள்ளை அருகே ஒன்றிய தி.மு.க., சார்பில் சைக்கிள் ஊர்வலம் நடந்தது.சட்டசபை தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், தி.மு.க., சார்பில் 'ஸ்டாலின்தான் வாராரு; விடியல் தரப் போறாரு' பாடலை வெளியிட்டுள்ளனர். இந்த பாடலை, பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில், பரங்கிப்பேட்டை தெற்கு ஒன்றிய தி.மு.க., சார்பில் சைக்கிள் ஊர்வலம் நடந்தது.கிள்ளை அடுத்த மேலச்சாவடியில்

கிள்ளை : கிள்ளை அருகே ஒன்றிய தி.மு.க., சார்பில் சைக்கிள் ஊர்வலம் நடந்தது.சட்டசபை தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், தி.மு.க., சார்பில் 'ஸ்டாலின்தான் வாராரு; விடியல் தரப் போறாரு' பாடலை வெளியிட்டுள்ளனர்.

இந்த பாடலை, பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில், பரங்கிப்பேட்டை தெற்கு ஒன்றிய தி.மு.க., சார்பில் சைக்கிள் ஊர்வலம் நடந்தது.கிள்ளை அடுத்த மேலச்சாவடியில் இருந்து சி.முட்லுார் மண்டபம் வரை நடந்த ஊர்வலத்திற்கு, ஒன்றிய செயலாளர் கலையரசன் தலைமை தாங்கி, துவக்கி வைத்தார்.ஊர்வலத்தில், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் நல்லதம்பி, ஒன்றிய கவுன்சிலர் மோகன்தாஸ், ஒன்றிய பொறுப்புக்குழு வெங்கடேசன், இளைஞரணி துணை அமைப்பாளர்கள் சேரமன்னன், அன்புச்செல்வன், திருமாறன் உட்பட பலர் பங்கேற்றனர்.புவனகிரிபுவனகிரியில் சட்டசபை தேர்தல் இருசக்கர வாகன பிரசார ஊர்வலத்தை சரவணன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.

நகர செயலாளர் கந்தன் வரவேற்றார்.ஒன்றிய செயலாளர்கள் மதியழகன், மனோகர், சபாநாயகம், ராயர் முன்னிலை வகித்தனர். ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக புவனகிரி மற்றும் கீரப்பாளையம் பகுதியில் சென்றது. ஊர்வலத்தில் கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர். மாவட்ட பிரிதிநிதி செல்லபாண்டியன் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X