ராமநாதபுரம்: ராமநாதபுரம் ஆயுதப்படைப் பிரிவில் இருந்து போலீஸ் ஸ்டேஷன் பணிகளுக்கு மாற்றப்பட்டுள்ள 76 முதல்நிலை மற்றும் இரண்டாம் நிலைக் காவலர்களுக்கு சிறப்பு பணி பயிற்சி அளிக்கப்படுகிறது.தமிழகத்தில் சட்ட சபை தேர்தலை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.,க்கள் சமீபத்தில் இடமாறுதல் செய்யப்பட்டனர். தற்போது ஆயுதப்படைப் பிரிவில் இருந்து முதல் மற்றும் இரண்டாம் நிலைக்காவலர்கள் 76 பேர் வட்டார அளவிலான போலீஸ் ஸ்டேஷன்களில் பணிபுரிய எஸ்.பி., கார்த்திக்உத்தரவிட்டுள்ளார். இவர்களுக்குப் பதிலாக பட்டாலியன் பிரிவிலிருந்து ஆயுதப்படைக்கு 80 பேர் வரவுள்ளனர். இடமாறுதல் செய்யப்பட்ட 76 போலீசாருக்கு மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் சிறப்பு பணிப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் பெண்கள், குழந்தைகள் தொடர்பான வழக்குகளை பதிவது குறித்தும், அவற்றைக் கையாள்வது குறித்து கூடுதல் எஸ்.பி., லயோலா இக்னேஷியஸ் பயிற்சியளித்தார்.நாளை (பிப்.,22) முதல் 76 பேரும் ஒதுக்கப்பட்ட ஸ்டேஷன்களில் பணியில் சேர உள்ளதாக போலீசார் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE