அவலுார்பேட்டை : திறந்த வெளி குடிநீர் கிணற்றுக்கு கம்பி வலை அமைத்திட கிராம மக்கள் எம்.எல்.ஏ.,விடம் கோரிக்கை விடுத்தனர்.
மேல்மலையனுார் அடுத்த கப்ளாம்பாடி கிராமத்தில் சேத்பட் சாலை அருகில் குடிநீர் சப்ளை செய்யப்படும் திறந்த வெளி கிணறு உள்ளது.இந்த கிணற்றுக்கு அருகே அம்மா மினி கிளினிக் மற்றும் செயல்படாத கழிவறை கட்டடங்கள் அமைந்துள்ளன. புதிய, பழைய காலனிகளில் உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டிளுக்கு இந்த கிணற்றிலிருந்து தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது.கிணற்றில் நாய்கள், பாம்புகள் உள்ளிட்டவைகள் விழுவதால் தண்ணீர் மாசடைகிறது.
கிணறு மற்றும் குடிநீரை பாதுகாக்கும் வகையில் கம்பி வலை அமைத்து தர வேண்டும் என கிராம மக்கள், மஸ்தான் எம்.எல்.ஏ.,விடம் கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில், மஸ்தான் எம்.எல்.ஏ., கிணற்றை நேரில் பார்வையிட்டு கம்பி வலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE