பொது செய்தி

தமிழ்நாடு

சுதந்திர போராட்ட தியாகி நினைவேந்தல் கூட்டம்

Added : பிப் 20, 2021
Share
Advertisement
கடலுார் : கடலுாரில் சுதந்திர போராட்ட தியாகி அஞ்சலை அம்மாள் 60ம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம் நடந்தது. அஞ்சலை அம்மாள் மன்றம் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, மன்ற தலைவர் மணிவாசகன் தலைமை தாங்கினார். அஞ்சலையம்மாள் பேத்தி மங்கையர்கரசி வரவேற்றார். சிறப்பு விருந்தினர் அமைச்சர் சம்பத், அஞ்சலையம்மாள் வாழ்க்கை வரலாறு புத்தகத்தை வெளியிட்டு பேசுகையில், 'பெண் அடிமையை

கடலுார் : கடலுாரில் சுதந்திர போராட்ட தியாகி அஞ்சலை அம்மாள் 60ம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம் நடந்தது.

அஞ்சலை அம்மாள் மன்றம் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, மன்ற தலைவர் மணிவாசகன் தலைமை தாங்கினார். அஞ்சலையம்மாள் பேத்தி மங்கையர்கரசி வரவேற்றார். சிறப்பு விருந்தினர் அமைச்சர் சம்பத், அஞ்சலையம்மாள் வாழ்க்கை வரலாறு புத்தகத்தை வெளியிட்டு பேசுகையில், 'பெண் அடிமையை உடைந்தெறிந்தவர் அஞ்சலையம்மாள். இவரைப்போன்று அனைத்து பெண்களுக்கும் வீரம், விவேகம், தேசப்பற்று இருக்க வேண்டும். அஞ்சலையம்மாள் வாழ்க்கை வரலாற்றை பள்ளி பாட புத்தகத்தில் சேர்ப்பது உள்ளிட்ட கோரிக்கைகள் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

நிகழ்ச்சியில், முன்னாள் எம்.எல்.ஏ., பலராமன், ஓய்வு பெற்ற முதன்மைச் செயலாளர்கள் சந்தானம், தனவேல், த.மா.கா., மாவட்டத் தலைவர் நெடுஞ்செழியன், சாகித்ய அகாடமி விருது பெற்ற வளர்மதி, முன்னாள் அரசு அலுவலர் ஒன்றிய மாநிலத் தலைவர் சூரியமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.கூட்டத்தில் அஞ்சலையம்மாள் பிறந்த நாளான ஜூன் 1ம் தேதியை அரசு விழாவாக கொண்டாட வேண்டும். கடலுார் நகர சாலை மற்றும் மாவட்டத்தில் ஏதாவது ஒரு அரசுப் பள்ளி அல்லது கல்லுாரிக்கு அவர் பெயரை சூட்ட வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X