வேலுார் இப்ராஹிம்னு ஒருத்தர், வீடியோ வைரலா போய்ட்டு இருக்கே, பாத்தீங்களா மாஸ்டர்...?
தமிழ்நாடு ஏகத்துவ ஜமாஅத் அப்படீங்ற ஒரு அமைப்போட தலைவர்டா, அவரு. ஒருத்தர்ங்ற...
மீடியால அவர பாத்தது இல்லைல்ல, மாஸ்டர். அதான் சொன்னேன்.
முஸ்லிம்களுக்கு எதிரான கட்சி, பீஜேபின்னு நடக்கிற பிரசாரத்துக்கு எதிரால்ல, இப்ராஹிம் பேசிட்டு இருக்காரு... அவர எப்டிடா மீடியால ஹைலைட் பண்ணுவாங்க. தன்னோட கருத்த மக்கள்ட்ட சொல்றதுக்கு, அவர் போனா எல்லா எடத்துலயும் போலீஸ் தடுத்து நிறுத்துறாங்க.
ஏன்னு கேட்டா, உங்க உயிருக்கு ஆபத்து, அதனால போவாதீங்கன்னு சொல்றாங்க. ஒருத்தன் உயிருக்கு ஆபத்துனு தெரிஞ்சா போலீஸ் என்னடா பண்ணணும்...?
அவருக்கு பாதுகாப்பு குடுக்கணும், மாஸ்டர்.
அல்லக்கைனு சொல்லிக்கிற உனக்கே இது தெரிஞ்சிருக்கு. இ.பி.எஸ்.,சுக்கு தெரியலையேடா.
அ.தி.மு.க.,வும், பீஜேபியும் கூட்டணியா தான இருக்காங்க. அப்றம் எதுக்கு இப்ராஹிம போலீஸ் தடுக்குது...?
சில முஸ்லிம் கட்சிகளுக்கும், அமைப்புகளுக்கும் அவரோட கருத்து பிடிக்கல. அதனால, அவர பேச விடாதீங்கன்னு, சீயெம்கிட்ட சொல்லி இருக்காங்க. அவரும் அத ஏத்துகிட்டதா தெரியுது.
அநியாயமா இருக்கே, மாஸ்டர்...?
அப்டிதான் இருக்கும். மத்திய அரசையும் மோடியவும் எப்டி வேணா கழுவி ஊத்தலாம். நாட்டுக்கு எதிராக்கூட பேட்டி குடுக்கலாம். அதுக்கு ஆக்ஷன் எடுத்தா, 'ஓ மை காட், இந்த நாட்ல கருத்து சுதந்திரம் கெடயாதான்னு' கதறுவாங்க. ஆனா, இப்ராஹிம் மாதிரி யார்னா ஒருத்தரயும் திட்டாம அமைதியா கருத்து சொன்னா, அவன வெட்றா குத்துறானு குதிப்பாங்க. அல்லது கவர்மென்டுக்கு பிரஷர் குடுத்து தடுப்பாங்க. இதாண்டா நம்மூரு நியாயம்.
இந்த விசயம் எடப்பாடியாருக்கு தெரியாதுனா சொல்றீங்க, மாஸ்டர்...?
விவசாயின்னா விசயம் தெரியாதுனு நினைச்சியாடா.. அவருக்கும் எல்லாம் தெரியும். ஆனா, சில விஷயங்கள அப்டி அப்டியே வச்சிருக்கணும்; அதான் வசதின்னு ஆளும் கட்சிகள் நினைக்கும். ஸ்டேட்டஸ் கோன்னு சொல்லுவாங்க. பீஜேபி ஒரு முஸ்லிம் விரோத கட்சினு நடக்ற பிரசாரத்த தடுக்காம விடுறது, சில வகையில லாபம்னு அவரு கணக்கு போட்டிருக்கலாம். இந்த மாதிரி விஷயங்கள்ல திராவிட கட்சிகளுக்கு இருக்ற ஒத்துமை இருக்கே, அடேங்கப்பா.
நெத்தீல விபூதி பூசிகிட்டு தெய்வீகமா மேடைக்கு வர்ற எடப்பாடி, 'தி.மு.க., தலைவர நீ போ வா' ன்னு பேசுறது நல்லாவா இருக்கு, மாஸ்டர்?
நல்லா இல்லதான். தி.மு.க.,ல யாருமே சீயெம்ம அப்டி ஒருமைல பேசினது இல்லயான்னு ஒரு மினிஸ்டர் கேட்டார்டா. 'சரீங்க... அவங்க அப்டி பேசினா, அந்த கட்சிக்கு அது மரியாத குறைச்சல்; ஆனா சீயெம் அப்டி பேசினா தமிழ்நாட்டுக்கே கவுரவ குறைச்சல் இல்லையா'ன்னு திருப்பி கேட்டேன். சைலன்ட் ஆய்ட்டார்.
மினிஸ்டர் சொன்னதுல நெசம் இருக்கு, மாஸ்டர். இ.பி.எஸ்.,சுக்கு இப்பதான் புத்தி வந்திருக்குனு ஸ்டாலின் பேசிருக்காரு. சீயெம் பத்தி ஜெயலலிதா மேடம் சொன்னத எல்லாம் மேடைல வாசிச்சு காட்டி, 'இப்ப தெரியுதா, உங்க முதலமைச்சர் ஒரு உதவாக்கரன்னு. நா சொல்லல, அவரோட தலைவியே சொல்லிட்டாங்க'ன்னு, கிண்டல் அடிக்கிறாரு.
அது சரி. பழைய குப்பைய கிளற ஆரமிச்சா, இங்க ஒருத்தர் கூட தேற மாட்டாங்க. இப்ப, தி.மு.க.,வையே ஆட்டி படைக்கிற, ஐ-பேக் முதலாளி இதுக்கு முன்னாடி ஸ்டாலின் பத்தி என்ன சொல்லிருக்கார், தெரியுமாடா...
பாத்தேன் மாஸ்டர். இங்லிஸ்ல இருக்கா... கொஞ்சம் புரியல...
கொஞ்சம் புரியலயா... டேய் டேய்.. சரி, தமிழ்ல சொல்றேன், கேட்டுக்க. பிரசாந்த் கிஷோர் சொல்றதோட தமிழாக்கம் இதான்: 'மொத மொதல்ல நான் ஸ்டாலின பாத்தப்ப, அவர பத்தி செமயா பில்டப் குடுத்தாங்க. ஆனா, அவருக்கு இங்லீசும் தெரியல, இந்தியும் தெரியல. ஒரு மொழி பெயர்ப்பாளர வச்சுதான் பேச வேண்டி இருந்துது.இளம் தலைவர்னு சொன்னாங்க. ஆனா அப்பவே அவருக்கு, 64 வயசு. இளைஞர் அணிக்கு தலைவராம். இப்ப, 69 இருக்கும். இன்னமும் இளம் தலைவர்னு சொல்லிகிட்டு திரியிறாங்க...' இதாண்டா நீ பாத்த வீடியோல வரவரு சொன்னது.
எந்துார்ல பேசினது மாஸ்டர்?
நம்மூர்ல இல்லடா. அமெரிக்கால ஹார்வர்டு யுனிவர்சிட்டில நடந்த மாநாட்டுல இப்டி விமர்சனம் பண்ணிருக்காரு. அவரத்தான் இப்ப, கட்சிக்கே மொத்த ஆலோசனை சொல்ற அட்வைசரா அப்பாயின்ட் பண்ணிருக்காரு ஸ்டாலின். 360 கோடி சம்பளம் குடுத்து...
இந்த வீடியோல்லாம் நம்ம பாப்போம்னு நெனச்சிருக்க மாட்டார், இல்லயா மாஸ்டர்?
கரெக்டா சொல்றடா. நம்ம புதுச்சேரி சீயெம் நாராயணசாமியும் அத நெனச்சு பாக்கல.
ராகுல் கிட்ட பொய் சொன்ன வீடியோதான, மாஸ்டர். நானும் பாத்தேன். ஆனா, அந்தம்மா அப்றமா விளக்கம் குடுத்துட்டாங்களே. 'நா ஒண்ணியும் சீயெம் அய்யாவ குத்தம் சொல்லி பேசலை'ன்னு...?
விளக்கம் யாரடா கேட்டாங்க. அதான் வீடியோல பளிச்சுனு தெரியுது, பேசினதும் கேக்குதே. ஊர்ல ஒரு பயலுக்கும் இங்லீஷ் தெரியாதுனு நெனச்சுகிட்டு இருக்காரு நாராயணசாமி.
அப்றம் எப்டி அந்தம்மா மறுப்பு சொல்லுச்சு, மாஸ்டர்?
டேய்... செத்துப் போன சொந்தப் புள்ளயவே இது தன்னோட மகன் இல்லைன்னு, அப்பா மூலமா வாக்குமூலம் குடுக்க வச்ச புண்ணிய பூமிடா, நம்ம தமிழ்நாடு.
யம்மாடி. அது என்ன மேட்டர், மாஸ்டர்?
சிதம்பரம் சிதம்பரம்னு ஒரு ஊரு இருக்கு, தெரியுமாடா. அங்க ஒரு காலேஜ் மாதிரினு வச்சுக்கயேன். அதுல ரொம்ப காலத்துக்கு முன்னாடி நடந்த சம்பவம் அது. அப்ப சீயெம்மா இருந்தவர் கருணாநிதி. இதுக்கு மேல விவரமா சொல்ல டைம் இல்ல. உங்க அப்பாகிட்ட கேளு, டீடெய்லா சொல்லுவாரு.
எங்கப்பா எதுக்கும் உதவாத ... கட்சீல இருக்கார்ரே, அவராண்ட எப்டி கேக்றது, மாஸ்டர்?
அந்த கட்சீல இருக்றவங்களுக்கு நல்லாவே தெரியும்டா. ஏன்னா, அப்ப அவங்க எதிர்க்கட்சி. போ போ.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE