திருவாடானையில் செயல்படாதகண்காணிப்பு கேமராக்கள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

திருவாடானையில் செயல்படாதகண்காணிப்பு கேமராக்கள்

Added : பிப் 20, 2021
Share
திருவாடானை: திருவாடானை சன்னதிதெரு, நான்கு ரோடு சந்திக்கும் இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் செயல்படாததால் திருட்டு சம்பவங்களை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.மதுரை- தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் திருவாடானை சன்னதி தெரு, ஓரியூர் செல்லும் நான்கு ரோடு சந்திக்கும் இடம் உள்ளது. இங்கு பல மாதங்களுக்கு முன்பு கண்காணிப்பு கேமரா வைக்கப்பட்டது.கடந்த

திருவாடானை: திருவாடானை சன்னதிதெரு, நான்கு ரோடு சந்திக்கும் இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் செயல்படாததால் திருட்டு சம்பவங்களை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.மதுரை- தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் திருவாடானை சன்னதி தெரு, ஓரியூர் செல்லும் நான்கு ரோடு சந்திக்கும் இடம் உள்ளது. இங்கு பல மாதங்களுக்கு முன்பு கண்காணிப்பு கேமரா வைக்கப்பட்டது.கடந்த சில மாதங்களாக அக் கேமராக்கள் இயங்காததால் திருடு போன்ற பல்வேறு சமூக விரோத செயல்களை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.திருவாடானை பழனி கூறியதாவது:நான்கு ரோடு சந்திக்கும் இடமாக இருப்பதால் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். மேலும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும் தலைவர்கள் இந்த இடத்தில் தான் திறந்த வேனிலிருந்து பிரசாரம் செய்வார்கள்.பொதுமக்கள் கூடும் இடமாக இருப்பதால் கண்காணிப்பு கேமரா அத்தியாவசிய தேவையாகும். சில நாட்களுக்கு முன் இங்குள்ள கடை கதவை உடைத்து உள்ளே நுழைந்த திருடர்கள் திருட முயற்சி செய்தனர்.ஆகவே பழுதான கேமராக்களை சரி செய்தும், கூடுதலாக கேமராக்களை அமைக்கவும் போலீசார் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X