விழுப்புரம் : ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கவும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திட 5 சதவீத மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு வழங்கப்பட்டது.
விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில், மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திர சேமிப்பு கிடங்கு உள்ளது. இங்கு, மாவட்டத்தில் உள்ள ஏழு சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கி, 4,097 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம், 3,068 ஓட்டு எண்ணும் இயந்திரம், 3,155 வி.வி., பேட் இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.இதில், இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவின்படி , வரும் சட்டசபை பொதுத்தேர்தலையொட்டி, ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கவும், வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் கலெக்டர் அண்ணாதுரை மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் அனுப்பும் பணிகள் நடந்தது.
தொகுதிகளில் உள்ள ஓட்டுச்சாவடி அடிப்படையில் 5 சதவீத மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் செஞ்சி,18; மயிலம்,15; திண்டிவனம்,16; வானுார்,16; விழுப்புரம்,19; விக்கிரவாண்டி,17; திருக்கோவிலுார்,17; உட்பட மொத்தம் 118 இயந்திரங்கள் மட்டும் சேமிப்பு கிடங்கில் இருந்து எடுத்து, சம்பந்தபட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு வழங்கும் பணி நடந்தது. தனி தாசில்தார் (தேர்தல்) சீனிவாசன் உட்பட தாசில்தார்கள் பலர் உடனிருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE