விழுப்புரம் : சாலை அகரம் ஊராட்சியில் மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி கட்டும் பணிக்கான பூமி பூஜையை அமைச்சர் சண்முகம் துவக்கி வைத்தார்.
கோலியனுார் ஒன்றியம், சாலைஅகரம் ஊராட்சியில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் மாநில நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் 20.74 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டப்படவுள்ளது. இந்த பணிக்கான பூமி பூஜை நிகழ்ச்சிக்கு, கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மகேந்திரன், ஆவின் தலைவர் முருகன் முன்னிலை வகித்தனர். தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க தலைவர் செந்தில் வரவேற்றார். அமைச்சர் சண்முகம், மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்கான பூமி பூஜையை துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் சுரேஷ்பாபு, மாவட்ட ஜெ., பேரவை இணைச் செயலாளர் சிவக்குமார், பணி மேற்பார்வையாளர் சுரேஷ், நிர்வாகிகள் சுப்ரமணி, வடமலை, மணிகண்டன், ராமலிங்கம், சிவசங்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE