கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி நகராட்சி துாய்மை பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி துவங்கியது.
கள்ளக்குறிச்சி அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் நகராட்சி துாய்மை பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி துவங்கியது. கள்ளக்குறிச்சி நகராட்சியில் மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த 100க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நேற்று முன்தினம் துவங்கியது. முதல் கட்டமாக 31 பேருக்கு தடுப்பூசி போடும் பணியை மேலுார் வட்டாரமருத்துவ அலுவலர் பாலதண்டாயுதபாணி துவக்கி வைத்தனர்.
நகராட்சி அரசு ஆரம்ப சுகாதார மைய மருத்துவ அலுவலர் பங்கஜம், செவிலியர்கள் அருள்மொழி, சங்கீதா, புள்ளியியலாளர் சரவணன், சுகாதார ஆய்வாளர்கள் கவியரசன், வெங்கடேசன், மருந்தாளுனர் சுதா உள்ளிட்ட மருத்துவக்குழுவினர், துாய்மைப்பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE