கடலுார், : சத்துணவு ஊழியர்களை முழு நேர ஊழியராக அறிவிக்க வேண்டும் என சத்துணவு ஊழியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட கன்வீனர் ரங்கசாமி அறிக்கை:சத்துணவு திட்டத்தில் அமைப்பாளர்கள், சமையலர்கள், சமையல் உதவியாளர்கள், 35 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகின்றனர். திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்தி வரும் சத்துணவு ஊழியர்களுக்கு முறையான காலமுறை ஊதியம் வழங்கவில்லை. இதுகுறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றும் பலன் இல்லை.அரசு பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டத்தை அமல்படுத்தி முழு நேர அரசு ஊழியர்களாக சத்துணவு ஊழியர்களை அறிவிக்க வேண்டும். சத்துணவு ஊழியர்களுக்கு பென்ஷனாக வழங்கப்படும் தொகையை 2,000 ரூபாயிலிருந்து, 7,000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE