அரசியல் செய்தி

தமிழ்நாடு

இந்த தேர்தலுடன் தி.மு.க., காணாமல் போய்விடும்

Added : பிப் 20, 2021
Share
Advertisement
விருத்தாசலம் : 'கருணாநிதி 10 பொய்களை கூறினால், ஸ்டாலின் 100 பொய்களை கூறுகிறார்' என முன்னாள் எம்.பி., அருண்மொழித்தேவன் பேசினார். ஜெ., பிறந்த நாள் விழா கொண்டாட இருப்பதையொட்டி, கடலுார் மேற்கு மாவட்ட அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் விருத்தாசலத்தில் நடந்தது.கூட்டத்திற்கு, தலைமைக் கழக பேச்சாளர் முருகுமணி தலைமை தாங்கினார்.ஜெ., பேரவை மாவட்டச் செயலாளர்கள் ரவிச்சந்திரன்,

விருத்தாசலம் : 'கருணாநிதி 10 பொய்களை கூறினால், ஸ்டாலின் 100 பொய்களை கூறுகிறார்' என முன்னாள் எம்.பி., அருண்மொழித்தேவன் பேசினார்.

ஜெ., பிறந்த நாள் விழா கொண்டாட இருப்பதையொட்டி, கடலுார் மேற்கு மாவட்ட அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் விருத்தாசலத்தில் நடந்தது.கூட்டத்திற்கு, தலைமைக் கழக பேச்சாளர் முருகுமணி தலைமை தாங்கினார்.ஜெ., பேரவை மாவட்டச் செயலாளர்கள் ரவிச்சந்திரன், உமா மகேஸ்வரன், பால்வள சேர்மன் பச்சமுத்து முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் சந்திரகுமார் வரவேற்றார். கலைச்செல்வன் எம்.எல்.ஏ., வாழ்த்திப் பேசினார். முன்னாள் நகராட்சி சேர்மன் அருளழகன் தீர்மானங்களை வாசித்தார்.

மாவட்டச் செயலாளர் அருண்மொழிதேவன் ஆலோசனை வழங்கிப் பேசுகையில், 'ஆசையை துாண்டும் வகையில் தி.மு.க.,வினர் தேர்தல் வாக்குறுதிகளை தருவார்கள். கருணாநிதி 10 பொய்களை கூறினால், ஸ்டாலின் 100 பொய்களை கூறுகிறார். தி.மு.க., தோல்வியடைந்தால், இந்த தேர்தலுடன் காணாமல் போய்விடும்.சசிகலா வருகையை ஆஹா, ஓ ேஹா என்றனர். ஆனால், ஒன்றுமே இல்லாமல் போய்விட்டது. அவரை வரவேற்க நகர, ஒன்றிய, பேரவை செயலாளர்கள், தொண்டர்கள் என யாருமே செல்லவில்லை.வேட்புமனு யார் வேண்டுமானாலும் வழங்கலாம், வேட்பாளர் ஒருவர் தான். அவர் யாராக இருந்தாலும், அனைவரும் ஒருங்கிணைந்து வெற்றி பெற செய்ய வேண்டும்.

மீண்டும் அ.தி.மு.க., ஆட்சி அமைந்ததும், விருத்தாசலம் தனி மாவட்டமாக அமைக்கப்படும்' என்றார்.ஐ.டி., அணி மண்டல துணைச் செயலாளர் அருண், அரசு வழக்கறிஞர் விஜயகுமார், ஒன்றிய சேர்மன்கள் மேனகா விஜயகுமார், செல்லதுரை, ஒன்றிய செயலாளர்கள் தம்பிதுரை, பாலதண்டாயுதம், கந்தசாமி, முத்து, ராஜேந்திரன், முனுசாமி, ரகுராமன், நகர செயலாளர் நீதிமன்னன், முன்னாள் சேர்மன் மனோகரன், நிர்வாகிகள் சத்யாசெல்வம், நடராஜன், செல்வகணபதி, மணிமாறன், ராஜேந்திரன், செல்வராஜ், எம்.ஜி.ஆர்., இளைஞரணி அரங்க மணிவண்ணன், முக்தார் அலி உட்பட பலர் பங்கேற்றனர்.

முன்னதாக, ஜெ., பிறந்த நாளில் நலத்திட்ட உதவிகள், அன்னதானம் வழங்கி, சிறப்பாக கொண்டாட வேண்டும். 24 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கிய முதல்வர், துணை முதல்வர் ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. பாசறை மாவட்டச் செயலாளர் ரமேஷ் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X