பள்ளி மாணவி தற்கொலை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பள்ளி மாணவி தற்கொலை

Added : பிப் 20, 2021
Share
தேவகோட்டை: தேவகோட்டையில் காதலை மறக்க முடியாத 10ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டார்.ராமநாதபுரம் மாவட்டம் சிறுகம்பையூரை சேர்ந்த சீமான் வெளிநாட்டில் உள்ளார். இவரது மகள் 15, பத்தாம் வகுப்பு படிக்கிறார். தாயார் பஞ்சவர்ணத்துடன் வசித்து வந்தார்.ஆர்.எஸ். மங்கலம் அருகே அரியாமொழியை சேர்ந்த வாலிபர் திலீபன் சிறுகம்பையூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு செல்லும் போது

தேவகோட்டை: தேவகோட்டையில் காதலை மறக்க முடியாத 10ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டார்.ராமநாதபுரம் மாவட்டம் சிறுகம்பையூரை சேர்ந்த சீமான் வெளிநாட்டில் உள்ளார். இவரது மகள் 15, பத்தாம் வகுப்பு படிக்கிறார். தாயார் பஞ்சவர்ணத்துடன் வசித்து வந்தார்.ஆர்.எஸ். மங்கலம் அருகே அரியாமொழியை சேர்ந்த வாலிபர் திலீபன் சிறுகம்பையூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு செல்லும் போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஒரு நாள் மாணவி காணாமல் போனதால் எஸ்.பி.பட்டணம் போலீசில் புகார் செய்ததை தொடர்ந்து திலீபன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர்தேவகோட்டை அண்ணாசாலையில் வாடகை வீட்டில் தாயும், மாணவியும் தங்கியிருந்தனர். தேவகோட்டையிலும் திடீரென மாணவி மாயமானதால் புகாரின் பேரில் மாணவியை மீட்டு சிவகங்கை காப்பகத்தில் கவுன்சிலிங்கிற்கு அனுப்பினர். இந்நிலையில் பள்ளிக்கூடம் திறந்ததால் மாணவி தேவகோட்டைக்கு வந்துஉள்ளார். நேற்றுமுன்தினம்சகோதரர் பள்ளிக்கு அழைத்தும் உடல்நிலை சரியில்லை என்று கூறிய மாணவி, வீட்டில்யாரும் இல்லாத நேரத்தில் துாக்கிட்டு இறந்து போனார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X