பொது செய்தி

தமிழ்நாடு

பிப்.26ல் அரளிப்பாறை மஞ்சுவிரட்டு

Added : பிப் 20, 2021
Share
Advertisement
சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே அரளிப்பாறையில் பிப். 26 ம் தேதி மஞ்சுவிரட்டு நடக்கிறது.இப்பகுதியில் முல்லைமங்கலம், சதுர்வேதமங்கலம், கண்ணமங்கலம்,சீர்சேர்ந்தமங்கலம், வேழமங்கலம் என ஐந்து மங்கலங்களாக நுாறுக்கும் மேற்பட்ட கிராமங்களில் ஐந்துநிலை நாட்டார்கள் என அழைக்கப்படும் மக்கள் வசிக்கிறார்கள்.இவர்கள் தங்களை குடும்பம் சகிதமாக சந்தித்து பரஸ்பரம் நலம் பாராட்டும்

சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே அரளிப்பாறையில் பிப். 26 ம் தேதி மஞ்சுவிரட்டு நடக்கிறது.இப்பகுதியில் முல்லைமங்கலம், சதுர்வேதமங்கலம், கண்ணமங்கலம்,சீர்சேர்ந்தமங்கலம், வேழமங்கலம் என ஐந்து மங்கலங்களாக நுாறுக்கும் மேற்பட்ட கிராமங்களில் ஐந்துநிலை நாட்டார்கள் என அழைக்கப்படும் மக்கள் வசிக்கிறார்கள்.இவர்கள் தங்களை குடும்பம் சகிதமாக சந்தித்து பரஸ்பரம் நலம் பாராட்டும் விதமாகவும், பாறை உச்சியில் உள்ள தண்டாயுதபாணியை வழிபடும் விதமாகவும் மாசி மகத்தன்று அரளிப்பாறையில் மஞ்சுவிரட்டு நடத்துவர். 800 ஆண்டுகளுக்கும்மேலாக பாரம்பரிய முறைப்படி நடத்தப்பட்டு வரும் இம்மஞ்சுவிரட்டை பாறையில் அமர்ந்து காணலாம் என்பதால் பெண்களும், சிறுவர்களும் இங்கு அதிக அளவில் கூடுவர். இம்மஞ்சுவிரட்டு பிப்.26ம் தேதி நடக்கிறது.இம்மஞ்சுவிரட்டு குறித்து தேவகோட்டை ஆர்.டி.ஓ., அலுவலகத்தில்நடந்த ஆலோசனை கூட்டத்தில் மஞ்சுவிரட்டை பாதுகாப்பாகவும், உரிய விதிமுறைகளுடனும் நடத்த அதிகாரிகள், விழாக்குழுவினர்களால் தீர்மானிக்கப்பட்டது.இதற்காக தொழு முன்பாக இருபுறமும் பேரிகார்டுகள், டவர்கள் அமைக்கப்படுகின்றன. மஞ்சுவிரட்டு தினத்தன்று போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதுகுறித்து போலீசாரும் விழா கமிட்டியினருடன் ஆலோசித்து வருகிறார்கள். காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யவும் ஏற்பாடுகள் நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X