தமிழ்நாடு

அதிருப்தி! மணிமுக்தாறு சீரமைப்பு பணி மந்தம் ... மாசிமக பிரம்மோற்சவத்தால் பொது மக்கள்

Updated : பிப் 21, 2021 | Added : பிப் 20, 2021
Share
Advertisement
விருத்தாசலம் : மாசிமக பிரமோற்சவம் துவங்கிய நிலையில், மணிமுக்தாறு சீரமைக்கும் பணி மந்தமாக நடப்பதால், அதிகாரிகள் மீது பொதுமக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். விருத்தாசலத்தில் 1,500 ஆண்டுகள் பழமையான விருத்தகிரீஸ்வரர் கோவிலில், மாசிமக பிரமோற்சவம் விமர்சையாக நடைபெறும். முக்கிய நிகழ்வாக, 10ம் நாள் மாசி மகத்தன்று, மணிமுக்தாற்றில் முன்னோர்களுக்கு திதி கொடுப்பது வழக்கம்.
 அதிருப்தி! மணிமுக்தாறு சீரமைப்பு பணி மந்தம் ... மாசிமக பிரம்மோற்சவத்தால் பொது மக்கள்

விருத்தாசலம் : மாசிமக பிரமோற்சவம் துவங்கிய நிலையில், மணிமுக்தாறு சீரமைக்கும் பணி மந்தமாக நடப்பதால், அதிகாரிகள் மீது பொதுமக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

விருத்தாசலத்தில் 1,500 ஆண்டுகள் பழமையான விருத்தகிரீஸ்வரர் கோவிலில், மாசிமக பிரமோற்சவம் விமர்சையாக நடைபெறும். முக்கிய நிகழ்வாக, 10ம் நாள் மாசி மகத்தன்று, மணிமுக்தாற்றில் முன்னோர்களுக்கு திதி கொடுப்பது வழக்கம். இதற்காக, பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் ஏராளமானோர் மணிமுக்தாற்றில் நீராடி, விருத்தகிரீஸ்வரரை வழிபட்டு செல்வர்.ஆற்றில் நீர்வரத்து இல்லாததால், கடந்த காலங்களில் செயற்கை நீரூற்று, பைப் லைன் மூலம் பக்தர்கள் நீராடவும், உடை மாற்றும் அறை என அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்து தருவது வழக்கம்.

இந்நிலையில், கடந்த ஆண்டு 'நிவர்', 'புரெவி' புயல்களால் பெய்த கனமழையால் மணிமுக்தாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, ஆற்றில் 10 அடி ஆழத்திற்கு மேலாக தண்ணீர் தேங்கி நிற்கிறது.மணிமுக்தாற்றில் சித்தி விநாயகர் படித்துறை பகுதியை 'புண்ணிய மடுவு' என அழைப்பதால், அங்கு தான் திதி கொடுப்பர். தற்போது அங்கு, அதிகளவு தண்ணீர் தேங்கி நிற்பதால், பக்தர்களுக்கு பாதுகாப்பில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.இதனைச் சுட்டிக்காட்டி, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானதைத் தொடர்ந்து, சப் கலெக்டர் பிரவீன்குமார் பார்வையிட்டு, ஆற்றில் சீரமைப்பு பணிகளை துவங்க உத்தரவிட்டார்.

ஆனால், ஒரு ஜே.சி.பி., இயந்திரம் மூலம் மணிமுக்தாறு பாலத்தின் கீழ் பகுதியில் கழிவுநீர் அகற்றும் பணி மட்டுமே நடக்கிறது.வரும் 26ம் தேதி, மாசிமக உற்சவம் நடக்க உள்ள நிலையில், சீரமைப்பு பணிகள் மந்தமாக நடப்பதால், அதிகாரிகள் மீது பொதுமக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X