பொது செய்தி

தமிழ்நாடு

சிங்கவரம் கோவிலில் ரதசப்தமி உற்சவம்

Added : பிப் 20, 2021
Share
Advertisement
செஞ்சி : சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் நடந்த ரத சப்தமி விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். செஞ்சி அடுத்த சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் மாசி மாத சப்தமி திதியை முன்னிட்டு நேற்று முன்தினம் ரத சப்தமி திருவிழா நடந்தது.அதனையொட்டி காலை 6:00 மணிக்கு பூதேவி, ஸ்ரீதேவி சமேத ரங்கநாதர் சூரிய பிரபை வாகனத்தில் மாட வீதியில் வலம் வந்தார். தொடர்ந்து 8:00 மணிக்கு சேஷவாகனத்திலும்,

செஞ்சி : சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் நடந்த ரத சப்தமி விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

செஞ்சி அடுத்த சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் மாசி மாத சப்தமி திதியை முன்னிட்டு நேற்று முன்தினம் ரத சப்தமி திருவிழா நடந்தது.அதனையொட்டி காலை 6:00 மணிக்கு பூதேவி, ஸ்ரீதேவி சமேத ரங்கநாதர் சூரிய பிரபை வாகனத்தில் மாட வீதியில் வலம் வந்தார். தொடர்ந்து 8:00 மணிக்கு சேஷவாகனத்திலும், 10:00 மணிக்கு கருட வாகனத்திலும், 12:00 மணிக்கு குதிரை வாகனத்திலும் சாமி ஊர்வலம் நடந்தது. 1:00 மணிக்கு விசேஷ திருமஞ்சனம், சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.

பிற்பகல் 2:00 மணிக்கு அனுமந்த வாகனத்திலும், மாலை 4:00 மணிக்கு யானை வாகனத்திலும், 6:00 மணிக்கு சந்திரபிரபை வாகனத்திலும் என ஒரே நாளில் ஏழு வாகனங்களில் சாமி வீதி உலா நடந்தது.நிகழ்ச்சியில் மஸ்தான் எம்.எல்.ஏ., இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், விழா குழுவினர், சிங்கவரம் கிராம பொது மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X