சாலை ஆக்கிரமிப்பால்அதிகரிக்கும் விபத்து

Added : பிப் 20, 2021
Share
Advertisement
சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே சாலையில் அதிகரித்துவரும் ஆக்கிரமிப்புகளால் விபத்துகளும் அதிகரித்து வருகின்றன. எஸ்.புதுார் ஒன்றியத்தின் பிரதான சாலையான புழுதிபட்டி -பொன்னமராவதி சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் பயணிக்கின்றன. இப்பகுதி மக்கள் மதுரை, திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு செல்ல இச்சாலையைத்தான்

சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே சாலையில் அதிகரித்துவரும் ஆக்கிரமிப்புகளால் விபத்துகளும் அதிகரித்து வருகின்றன. எஸ்.புதுார் ஒன்றியத்தின் பிரதான சாலையான புழுதிபட்டி -பொன்னமராவதி சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் பயணிக்கின்றன. இப்பகுதி மக்கள் மதுரை, திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு செல்ல இச்சாலையைத்தான் பயன்படுத்துகின்றனர்.21 கி.மீ., துாரமுள்ள இச்சாலை மிகவும் குறுகலாகவும் அதிக வளைவுகள் கொண்டதாகவும் உள்ளது. சில இடங்களில் ஆபத்தான விலக்கு ரோடாகவும் உள்ளது. இதனால் இச்சாலையில் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது.சாலையின் இருபுறமும் சில இடங்களில் சிலர் ஆக்கிரமித்து கட்டுமானங்களை கட்டியுள்ளதோடு, வேலிகளையும் அடைத்து வைத்துஉள்ளனர். இதனால் விபத்துகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் இச்சாலையை முறையாக அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றுவதுடன், சாலையின் அகலத்தையும் அதிகப்படுத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X