காரைக்குடி: காரைக்குடி அரசு மருத்துவமனையில், நோயாளி உடனிருப்போர் தங்கும் விடுதி 3 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்டும், அது கர்ப்பிணிகள் தங்கும் வார்டாக மாற்றப்பட்டதால் உறவினர்கள் சிரமப்படுகின்றனர். காரைக்குடி வ.சூரக்குடி சாலையில் அமைந்துள்ள அரசு மருத்துவமனையில், பிரசவ வார்டு, ஆப்பரேஷன்தியேட்டர், புறநோயாளிகள் பிரிவு உள்ளிட்ட பிரிவுகள் செயல்படுகிறது. காரைக்குடி, தேவகோட்டை மட்டுமின்றி புதுக்கோட்டை மாவட்டம், ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்தும் சிகிச்சைக்காக பலர் இங்கு வந்து செல்கின்றனர். இங்கு, மாதத்திற்கு 400க்கும் மேற்பட்ட பிரசவங்கள் நடக்கிறது. பிரசவம் மற்றும் பிற சிகிச்சைக்காக வரும் நோயாளிகளின் உறவினர்கள் தங்குவதற்காக ரூ.70 லட்சம் செலவில் புதிய கட்டடம் 2016-17 ஆண்டில் கட்டப்பட்டு 2020ல் திறக்கப்பட்டது.புதிய கட்டடம் திறக்கப்பட்டும் நோயாளிகளின்உறவினர்கள் தங்க முடியாத நிலை தற்போது நிலவுகிறது. இந்த கட்டடம் கர்ப்பிணிகளை தங்க வைக்கும்புதிய வார்டாக மாற்றப்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு வருபவர்கள் வெளியே தங்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE