உதவித்தொகை பெற சிரமப்படும் முதியவர்கள்

Added : பிப் 20, 2021
Share
Advertisement
திருப்புத்துார்: திருப்புத்துார் தாலுகா அலுவலகத்தில் உள்ள இ.சேவை மையத்தில் முதியோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்க செல்லும் முதியவர்கள் ஸ்கேனர் வசதி இல்லை என்று அலைக்கழிக்கப்படுகின்றனர்.தமிழக அரசின் சார்பில்முதியோர்களுக்கு உதவித்தொகை ரூ.1000 வழங்கப்படுகிறது. ஆதரவற்றவர்கள், 60 வயதானவர்கள்உரிய சான்றுகளுடன் விண்ணப்பிக்க வேண்டும். திருப்புத்துாரில் பெரும்பாலும்

திருப்புத்துார்: திருப்புத்துார் தாலுகா அலுவலகத்தில் உள்ள இ.சேவை மையத்தில் முதியோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்க செல்லும் முதியவர்கள் ஸ்கேனர் வசதி இல்லை என்று அலைக்கழிக்கப்படுகின்றனர்.தமிழக அரசின் சார்பில்முதியோர்களுக்கு உதவித்தொகை ரூ.1000 வழங்கப்படுகிறது. ஆதரவற்றவர்கள், 60 வயதானவர்கள்உரிய சான்றுகளுடன் விண்ணப்பிக்க வேண்டும். திருப்புத்துாரில் பெரும்பாலும் தாலுகா அலுவலகத்தில் உள்ள இ.சேவை மையங்களில் விண்ணப்பித்து வந்தனர். சில வாரங்களாக அங்கு விண்ணப்பிக்க முடியாமல் தனியார் இ சேவை மையங்களுக்கு அனுப்பப்படுகின்றனர். அங்கு விண்ணப்பிக்க முடியாவிட்டால் வேறு மையங்களுக்கு என்று அலைக்கழிக்கப்படுகின்றனர்.இ.சேவை மையத்தில் விசாரித்த போது இங்கு 2 பணியாளர்கள் உள்ளனர். இருந்த இரண்டு ஸ்கேனர்களில் ஒன்று பழுதாகி விட்டது. இதனால் ஒரு ஸ்கேனர் மூலம் மட்டுமே இருவரும் பணியாற்ற வேண்டியுள்ளது. தற்போது வாக்காளர் பதிவு, டி.என்,பி.எஸ்.சி.,தேர்வு சான்றிதழ் பதிவேற்றம், தையல் இயந்திரம் பெற விண்ணப்பம் என்று குறிப்பிட்ட காலவரைக்குள் விண்ணப்பிக்கும் பணிக்கு முன்னுரிமை கொடுத்து செய்கிறோம்.ஒரு வாரம் கழித்து வர முதியவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம். முடியாதவர்களுக்கு அங்கீகாரம் பெற்ற தனியார் இ சேவை மையங்களுக்கு அனுப்புகிறோம்' என்றனர்.தாலுகா அலுவலகத்தில் இருப்பதாலும், அரசுக் கட்டணத்தில் செய்வதாலும், அரசு கேபிள் நிறுவனத்தின் இந்த சேவை மையத்திற்கே பலர் விண்ணப்பங்கள் பதிவிட மக்கள் வருகின்றனர். அதற்கேற்ப கூடுதல் பணியாளர்கள் நியமிக்கவும், கருவிகள் பழுதானால் உடனடியாக மாற்ற வேண்டியதும் அவசியமாகும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X