ஊஞ்சல் உற்சவம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஊஞ்சல் உற்சவம்

Added : பிப் 20, 2021
Share
புதுச்சத்திரம் : புதுச்சத்தி்ரம் அடுத்த பெரியாண்டிக்குழி பாலமுருகன் கோவிலில் கிருத்திகையையொட்டி ஊஞ்சல் உற்சவம் நடந்தது. அதனையொட்டி நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு பாலமுருகனுக்கு அபிஷேக, ஆராதனை நடந்தது. தொடர்ந்து இரவு 8:00 மணிக்கு பாலமுருகன், விநாயகர், அம்மன் சுவாமிகள் திருத்தேரில் கோவில் வலம் வந்தது. 9:00 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. அதையொட்டி பாலமுருகன் சுவாமி

புதுச்சத்திரம் : புதுச்சத்தி்ரம் அடுத்த பெரியாண்டிக்குழி பாலமுருகன் கோவிலில் கிருத்திகையையொட்டி ஊஞ்சல் உற்சவம் நடந்தது.

அதனையொட்டி நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு பாலமுருகனுக்கு அபிஷேக, ஆராதனை நடந்தது. தொடர்ந்து இரவு 8:00 மணிக்கு பாலமுருகன், விநாயகர், அம்மன் சுவாமிகள் திருத்தேரில் கோவில் வலம் வந்தது. 9:00 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. அதையொட்டி பாலமுருகன் சுவாமி ஊஞ்சலில் வைத்து பம்பை, உடுக்கையுடன்தாலாட்டு பாடும் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X