காரைக்குடி: காரைக்குடி சுற்று வட்டார பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் மண்பானை விற்பனை சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. காரைக்குடி மற்றும் சுற்றுவட்டாரத்தில், மாலை ஆறுமணி தொடங்கி காலை எட்டு மணி வரையிலும் பனிப்பொழிவு அதிகளவில் காணப்படுகிறது. மதியம் வெயிலின் தாக்கம் கூடுதலாகவே உள்ளது.தண்ணீரின் தேவை அதிகரித்து வருகிறது.கோடை வெயிலின் தாக்கத்தை தாக்குப்பிடிக்க குளிர்ந்த குடிநீருக்காக மக்கள் மண்பானைகளை வாங்கி வருகின்றனர்.மண்பானைகள் கூஜா, பானை வடிவம், வாட்டர்கேன் வடிவங்களிலும், பானையில் குழாய் பொருத்தி விற்பனையாகி வருகிறது. 1 லிட்டர் முதல் 30 லிட்டர் வரை கொள்ளளவு கொண்ட பானைகள் ரூ.100 லிருந்து ரூ.400 வரை விற்பனை செய்யப்படுகிறது. மண்பானையில் தயாராகி விற்பனை செய்யப்படும் பானை, கூஜாக்களை மக்கள் ஆர்வமாக வாங்கி சென்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE