தொண்டாமுத்துார்:தொண்டாமுத்துார் வட்டார விவசாயிகள், 6,000 ஏக்கரில் பயறு வகைகள், 1,220 ஏக்கரில் நிலக்கடலை சாகுபடி செய்துள்ளனர். இதில், 125 ஏக்கர் பயறு வகை பயிர்கள் மற்றும், 10 ஏக்கர் நிலக்கடலை பயிர்கள், விதைகளாக, கோவை விதை சான்று மற்றும் அகச்சான்று துறையின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இவற்றை ஆய்வு செய்த, கோவை விதைச்சான்று உதவி இயக்குனர் வானதி கூறியதாவது: தட்பவெட்ப நிலை மற்றும் காலநிலை மாற்றத்தை அடிப்படையாகக் கொண்டு, வேளாண் தொழில் செய்ய வேண்டும். சரியான பருவத்தில் பயிரிட்டால் மட்டுமே, விவசாயிகள் நல்ல மகசூலை பெற முடியும்.தரமான விதை உற்பத்தி செய்வது குறித்து தொடர் பயிற்சி மற்றும் ஆலோசனை விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. விதைச்சான்று துறை அலுவலர்கள் கவனமுடன் பணிபுரிவதால், தரமான விதை உற்பத்தி செய்து, வினியோகிக்க முடிகிறது. இந்தாண்டு, 2,000 மெட்ரிக் டன் தரமான விதை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE