கோவை கதிர் கல்லுாரி மாணவர்கள், ரயில்வே ஸ்டேஷனில், சாலை பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடம், நாடகம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில், 20க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு தொடர்பான உறுதிமொழி எடுத்து டான்ஸ், நாடகம் உள்ளிட்டவற்றை நடத்தினர். கோவை ரயில்வே மண்டல இயக்குனர் ராகேஷ்குமார், கல்லுாரி பேராசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.பட்டய சான்றிதழ் படிப்பு அறிமுகம்ரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், அடக்கவிலை மேலாண்மை கணக்கியல் என்ற பட்டய சான்றிதழ் படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டது.நடப்பு கல்வியாண்டு முதல் கல்லுாரியின் வணிகவியல் துறையுடன் மாஸ்டர் கல்வியியல் அறக்கட்டளை செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில், வணிகவியல் துறைகளை சேர்ந்த மாணவர்களுக்காக, இப்படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இப்படிப்பு அறிமுக நிகழ்ச்சியில், மாணவர்களுக்கு புத்தக குறிப்புகள் வழங்கப்பட்டன.கல்லுாரி முதல்வர் முரளிதரன், வணிகவியல் துறை தலைவர் ஹேமலதா, துறை பேராசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.மாணவர்களுக்கு வரவேற்புகோவை சுகுணா கலை அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு, மாணவர்களுக்கு வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சி, கல்லுாரி வளாகத்தில் நடந்தது. சுகுணா கல்வி நிறுவனங்களின் தலைவர் லட்சுமி நாராயணன் தலைமை வகித்தார். கல்லுாரி செயலர் ஸ்ரீகாந்த்கண்ணன் மற்றும் இயக்குனர் சேகர் வாழ்த்துரை வழங்கினர்.கல்லுாரி முதல்வர் வைத்தியநாதன் பேசுகையில், ''மாணவர்கள் சிறந்த முறையில் கல்வி கற்றால் மட்டுமே, வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய முடியும். கல்வியின் முக்கியத்துவத்தையும், அவசியத்தையும் அறிந்து, படிப்பில் மாணவர்கள் கவனம் செலுத்த வேண்டும்,'' என்றார்.தமிழ்த்துறைத்தலைவர் அன்புசிவா, வணிகவியல் துறைத்தலைவர் நாகலட்சுமி, மேலாண்மைத்துறை தலைவர் லட்சுமணன் மற்றும் முனைவர் வித்யா ஆகியோர் பங்கேற்றனர்.மாணவர்களுக்கு திறனறி போட்டிமாணவர்களிடம் ஆளுமைத்திறன் வளர்க்கும் வகையில், திறனறி போட்டி நடத்தப்பட்டது. ஒன்பது முதல், பிளஸ் 2 வரையிலான மாணவர்கள் பங்கேற்ற இப்போட்டியில், கோவை மாவட்டத்தில், 193 பள்ளிகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். பாடப்புத்தகத்தை தாண்டி, புதிய மாறுபட்ட கோணத்தில் சிந்தித்தல், ஆழமாக விவாதிக்கும் சூழலை உருவாக்குவதே, இப்போட்டி நோக்கம். வெற்றி பெறும் மாணவர்களுக்கு, வரும், 25ல் மாவட்ட அளவிலான போட்டி, ராஜவீதி துணிவணிகர் மேல்நிலைப்பள்ளியில் நடத்தப்படும் என, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.சுற்றுச்சூழல் பாதுகாப்புபுரிந்துணர்வு ஒப்பந்தம்நேரு மஹா வித்யாலயா கலை, அறிவியல் கல்லுாரி நாட்டு நலப்பணி திட்டமும், நல்லறம் அறக்கட்டளையும் இணைந்து, சுற்றுச் சூழல் பாதுகாப்பு குறித்து புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டன.அறக்கட்டளையால் நடத்தப்படும் சுற்றுச்சூழல் திட்டங்களுக்கு, நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள், மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சுற்றுச்சூழல் தலைப்புகளில் விரிவுரை வழங்குதல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த நிகழ்வுகள் மற்றும் களப்பணிகள் ஏற்பாடு செய்தல், ஏரிகளை சுத்தம் செய்தல், நிலையான நீர்க்கழிவு மேலாண்மை மாதிரிகள் பற்றி கற்பித்தல், இயற்கை வேளாண்மை, வீட்டுத்தோட்டம் அமைத்தல் உட்பட பல்வேறு கொள்கைகளுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது.நல்லறம் அறக்கட்டளை தலைவர் அன்பரசன், எஸ்.என்.எம்.வி., கல்லுாரி செயலாளர் சுனில்குமார், கல்லுாரி முதல்வர் சுப்ரமணி ஆகியோர் முன்னிலையில், புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE