பொது செய்தி

தமிழ்நாடு

அரசு பள்ளிகளில் காலி பணியிடம் :பட்டியல் திரட்டும் பணி மும்முரம்

Added : பிப் 20, 2021
Share
Advertisement
கோவை:அரசு பள்ளிகளில் பாட வாரியாக காலியாக உள்ள, ஆசிரியர் பணியிடங்கள் குறித்த பட்டியல் திரட்டும் பணி நடக்கிறது.சட்டசபை தேர்தல் அறிவிப்பு வெளியிடும் முன், பள்ளி கல்வித் துறையில் காலியிடங்கள் நிரப்பும் பணி மேற்கொள்ளப்படுகிறது. சமீபத்தில், முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கான பட்டியல் வெளியிடப்பட்டது.தொடக்க கல்வித்துறையில் பதவி உயர்வுக்கு காத்திருப்போர்

கோவை:அரசு பள்ளிகளில் பாட வாரியாக காலியாக உள்ள, ஆசிரியர் பணியிடங்கள் குறித்த பட்டியல் திரட்டும் பணி நடக்கிறது.சட்டசபை தேர்தல் அறிவிப்பு வெளியிடும் முன், பள்ளி கல்வித் துறையில் காலியிடங்கள் நிரப்பும் பணி மேற்கொள்ளப்படுகிறது. சமீபத்தில், முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கான பட்டியல் வெளியிடப்பட்டது.தொடக்க கல்வித்துறையில் பதவி உயர்வுக்கு காத்திருப்போர் பட்டியல், மாவட்ட வாரியாக திரட்டப்பட்டது. இந்நிலை யில், அனைத்து அரசு பள்ளிகளிலும், பாட வாரியாக, காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் குறித்த பட்டியல் திரட்டப்படுகிறது.அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கூறுகையில், 'மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளதால், புதிதாக நியமிக்க வேண்டிய ஆசிரியர்கள் குறித்த பட்டியல் பெறப்பட்டது. தற்போது, பாட வாரியாக காலியிடங்கள் குறித்த விபரங்கள் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. பதவி உயர்வு கலந்தாய்வு நடப்பதால், காலியிடங்கள் எண்ணிக்கையை உறுதி செய்ய, இவ்விபரங்கள் திரட்டப்படலாம். பொதுத்தேர்வுக்கு முன் காலியிடங்கள் நிரப்பினால், மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க பயனுள்ளதாக இருக்கும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X