கோவை:பட்டுக்கூடு உற்பத்தியை அதிகரிக்க, பட்டு விவசாயிகளுக்கு, ரூ.30 லட்சம் மானியம் வழங்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, பட்டு வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் அப்துல் பாரூக் கூறியதாவது:கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில், புதிதாக, 82 விவசாயிகள் தங்கள் நிலத்தில் பட்டுக்கூடு பயிரிட்டுள்ளனர். 32 விவசாயிகள் புது நடவு செய்துள்ளனர். அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக,ஏக்கருக்கு, 10 ஆயிரத்து,500 ரூபாய் வீதம், 55 ஏக்கருக்கு நடவு மானியம் கொடுக்கப்பட்டுள்ளது.இதில்,40 ஏக்கருக்கு இலவசமாக சொட்டு நீர் பாசனம் வசதி அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது. புழு வளர்ப்பு மனை கட்டுவதற்கு, 81 ஆயிரம் ரூபாய் வீதம்,15 விவசாயிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. பட்டு உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கத்தோடு, பல்வேறு வகையில் இந்தாண்டு மட்டும், 30.20 லட்சம் ரூபாய் மானியமாக வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர்கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE