மானாமதுரை: மானாமதுரை பகுதியைசுற்றி விரிவாக்கமடைந்து வருவதால் ஏராளமான விவசாய நிலங்கள் வீட்டுமனைகளாக மாறி வருகின்றன.மானாமதுரை பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் வளர்ந்து வரக்கூடிய நகரங்களில் மானாமதுரையும் ஒன்று. மானாமதுரை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமானவர்கள் வீடுகளை கட்டி வருகின்றனர். நிலத்தின் தேவை அதிகரித்துள்ளதாலும், விவசாயத்திற்கு வேண்டிய தண்ணீர் தட்டுப்பாட்டாலும் பெரும் பாலான விவசாயிகள் தங்களது நிலத்தை விற்று விடுகின்றனர்.நிலத்தை வாங்குபவர்கள் அவற்றை மனைகளாக்கி விடுகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE