கோவை:தமிழகத்தில் புதிதாக துவக்கப்படும் அரசு மருத்துவ கல்லுாரிகளில், மற்ற பணியிடங்களை காலமுறை பணியிடங்களாகவும், ஆய்வக நுட்பனர் நிலை-2 பணியிடங்கள் மட்டும் தினக்கூலியில் நிரப்பவும் அரசாணை வெளியிட்டுள்ளது. இதை ரத்து செய்து, ஆய்வக நுட்பனர் பணியிடங்களையும் காலமுறை பணியிடங்களாக அறிவிக்க வேண்டும்.கடந்த, 2002-03ல் நியமிக்கப்பட்ட, ஆய்வக நுட்பனர்களை, ஐகோர்ட் தீர்ப்புப்படி, பணி வரன்முறை செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்க வேண்டும். 2009ல் வெளியிட்ட ஆய்வக நுட்பனர் கவுன்சில் அரசாணை-417ஐ நடைமுறைப்படுத்த வேண்டும்.ஆய்வக நுட்பனர் நிலை-2, காலிப்பணியிடங்களை மருத்துவ பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்ப வேண்டும். பல ஆண்டுகளாக, நிலுவையில் உள்ள கோரிக்கைகள் மீது தமிழக அரசு, மாநில நிர்வாகிகளை அழைத்து, நேரடி பேச்சு நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு மருத்துவ ஆய்வக நுட்பனர் சங்கம் சார்பில், கோவை அரசு மருத்துவ மனையில், கவன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.மாவட்ட தலைவர் ராதாமணி தலைமை வகித்தார், மாநில செயலாளர் முருகானந்தம், மாவட்ட பொருளாளர் சிவக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE