ஏ.டி.எம்., இயந்திரத்தைஉடைத்த பட்டதாரி கைது
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம், கொல்லங்கோடு அருகே நித்திரவிளையில் உள்ள ஏ.டி.எம்., இயந்திரம், நேற்று முன்தினம் உடைக்கப்பட்டு இருந்தது. 'சிசிடிவி' காட்சிகளை பார்த்து, போலீசார் விசாரித்தனர். சின்னத்துரை செபாஸ்டின் தெருவை சேர்ந்த வினோத், 24, என்பவரை கைது செய்தனர்.விசாரணையில், பி.ஏ., படித்துள்ள வினோத், செலவுக்கு பணம் இல்லாததால், ஏ.டி.எம்., இயந்திரத்தை உடைத்ததை ஒப்புக் கொண்டார். அவருக்கு வேறு வழக்குகளில் தொடர்பு உள்ளதா என, போலீசார் விசாரிக்கின்றனர்.
சிலிண்டர் வெடித்து மூதாட்டி பலி
நாகர்கோவில்: குமரி மாவட்டம், நாகர்கோவில் வடிவீஸ்வரத்தை சேர்ந்தவர் ராமசுப்பு. சில மாதங்களுக்கு முன் இறந்தார். மனைவி ஆறுமுகம், 70, தனியாக வசித்து வந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவில், வீட்டில் மின்கசிவு ஏற்பட்டு பரவிய தீயில், காஸ் சிலிண்டர் வெடித்தது. ஆறுமுகம் மீது கூரை இடிந்து விழுந்ததால், அவர் பலியானார்.
தண்ணீரில் விஷம்6,000 கோழிகள் சாவு
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம், பூதப்பாண்டி துவரங்காட்டைச் சேர்ந்தவர் சுரேஷ்; நண்பர் ராஜேஷ். இருவரும் இணைந்து, செண்பகராமன்புதுார் தோட்டத்தில், கோழிப்பண்ணை வைத்துள்ளனர். நேற்று காலை பண்ணையில், 6,000 கோழிகள் இறந்து கிடந்தன. இது குறித்த புகார்படி, ஆரல்வாய்மொழி போலீஸ் விசாரித்தனர். விசாரணையில், கோழிகள் குடிக்கும் தண்ணீரில் விஷம் கலந்தது தெரிந்தது. முன்விரோதத்தில் இச்சம்பவம் நடந்து உள்ளது. மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE