அரசியல் செய்தி

தமிழ்நாடு

கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தினர் அ.தி.மு.க., மாவட்டச் செயலாளரிடம் மனு

Added : பிப் 20, 2021
Share
Advertisement
திட்டக்குடி : மங்களூர், நல்லுார், விருத்தாசலம் ஒன்றியங்களைச் சேர்ந்த கிராம வறுமை ஒழிப்பு சங்கம் மற்றும் ஊராட்சி அளவிலான குழுக் கூட்டமைப்பு கணக்காளர்கள், 3 அம்ச கோரிக்கைகள் குறித்து அ.தி.மு.க., மாவட்டச் செயலாளர் அருண்மொழிதேவனை சந்தித்து மனு அளித்தனர். மனு விபரம்:கிராம வறுமை ஒழிப்பு சங்கம் மற்றும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பின் கணக்காளராக கடந்த 14 ஆண்டுகளாக பணியில்

திட்டக்குடி : மங்களூர், நல்லுார், விருத்தாசலம் ஒன்றியங்களைச் சேர்ந்த கிராம வறுமை ஒழிப்பு சங்கம் மற்றும் ஊராட்சி அளவிலான குழுக் கூட்டமைப்பு கணக்காளர்கள், 3 அம்ச கோரிக்கைகள் குறித்து அ.தி.மு.க., மாவட்டச் செயலாளர் அருண்மொழிதேவனை சந்தித்து மனு அளித்தனர்.

மனு விபரம்:கிராம வறுமை ஒழிப்பு சங்கம் மற்றும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பின் கணக்காளராக கடந்த 14 ஆண்டுகளாக பணியில் உள்ளோம்.மாற்றுத் திறனாளிகள், கணவரால் கைவிடப்பட்டவர்கள், விதவைகள், பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழைப் பெண்கள் இந்தப் பணியில் உள்ளனர். 500 ரூபாய் மாத ஊதியத்தில் துவங்கிய எங்கள் பணி, 2,000 ரூபாய் மாத ஊதியமாக பெற்றோம்.கடந்த நான்கு ஆண்டுகளாக ஊதியம் இல்லாமல் பணிபுரிந்து வருகிறோம்.மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் எங்களுக்கு இரு தினம் பயிற்சி அளித்து, ஊராட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் பணிக்கான ஆணை வழங்கப்பட்டு பின் திரும்ப பெறப்பட்டு விட்டது.

எங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தற்போதைய சூழ்நிலைக்கேற்ப ஊதிய உயர்வு, பணி நிரந்தரம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட ஒருங்கிணைப்பாளர் பணி வழங்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.மனுவை பெற்றுக்கொண்ட அருண்மொழித்தேவன், முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X