வானுார் : கிளியனுார் அருகே கார் மோதிய விபத்தில், செக்யூரிட்டி இறந்தார்.
கிளியனுார் அருகேயுள்ள சின்னகாட்ராம்பாக்கம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராசு மகன் வீரப்பன்,55; விவசாய தோட்டத்தில் செக்யூரிட்டியாக பணியாற்றி வந்த இவர், நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு, வேலையை முடித்து விட்டு, திண்டிவனம்- புதுச்சேரி புறவழிச் சாலையில் சின்னகாட்ராம்பாக்கம் சந்திப்பு வழியாக வீட்டிற்கு நடந்து சென்றார். அப்போது, திண்டிவனத்தில் இருந்து புதுச்சேரி நோக்கி பிஒய்.01.பிடபிள்யூ.7006 பதிவெண் கொண்ட போர்டு பிகோ கார், வீரப்பன் மீது மோதியது. அதில் படுகாயமடைந்த வீரப்பன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.விபத்து குறித்து கிளியனுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE