விருத்தாசலம் : பா.ம.க., பிரமுகருக்கு கொலை மிரட்டல் விடுத்த மூவரை போலீசார் கைது செய்தனர்.
விருத்தாசலம் கருணாநிதி நகரைச் சேர்ந்தவர் செந்தில், 38; பா.ம.க., மாவட்ட துணைச் செயலாளர். பெரியார் நகரைச் சேர்ந்தவர் புருேஷாத்தமன், 27; இருவருக்குமிடையே பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.நேற்று முன்தினம் காங்., திடலில் நின்றிருந்த செந்திலை புருேஷாத்தமன் ஆதரவாளர்கள் நாச்சியார்பேட்டை சங்கர், 37; ரயில்வே ஜங்ஷன் பகுதியைச் சேர்ந்த சிம்பு, 37; ஆகியோர் திட்டி, கொலை மிரட்டல் விடுத்தனர்.புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து புருேஷாத்தமன், சங்கர், சிம்பு ஆகிய மூவரையும் கைது செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE