பேரூர்:இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில், அன்னதானம் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பேரூர் பட்டீஸ்வரர், பூண்டி, மருதமலை உள்ளிட்ட கோவில்களுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப, தினமும், 25 பேர் முதல், 100 பேருக்கு சாப்பாடு, சாம்பார், ரசம், மோர், கூட்டுப் பொறியலுடன் அன்னதானம் வழங்கப்பட்டது. விசேஷ நாட்களில் வடை, பாயாசத்துடன் உணவு வழங்கப்பட்டது.கொரோனா பரவிய காரணத்தால், அன்னதான திட்டம் செயல் படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. ஒரே இடத்தில் மக்களை திரட்டக்கூடாது என்பதற்காக, தக்காளி, தயிர், புளி சாப்பாடுகள் 'பார்சல்'களாக தயார் செய்து, வழங்கப்படுகிறது. தற்போது, கொரோனா பரவல் குறைந்து இயல்பு நிலை திரும்பியுள்ளது. அரசியல் கூட்டங்களில், ஆயிரக்கணக்கானோர் பங்கேற்கின்றனர். எனவே, கோவில்களில் மீண்டும் சாம்பார், ரசத்துடன் அமர்ந்து உண்ணும் வகையில் அன்னதானம் வழங்க, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE