திட்டக்குடி : திட்டக்குடி அடுத்த மா.பொடையூர் ஜெ.எஸ்.ஏ., வேளாண் தொழில்நுட்ப கல்லுாரி இறுதியாண்டு மாணவிகளின் கிராமத்தில் தங்கி பயிற்சி பெறும் முகாம் துவக்க விழா நடந்தது.
கண்டமத்தான் கிராமத்தில் நடந்த விழாவிற்கு, கல்லுாரி முதல்வர் தாணுநாதன் தலைமை தாங்கினார்.ஊராட்சித் தலைவர் சசிகலா அழகுவேல், துணைத் தலைவர் வெங்கடேசன், ஒன்றிய கவுன்சிலர் சரவணன், வி.ஏ.ஓ., பழனிமுத்து, ஊராட்சி செயலாளர் முத்தழகன் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.திட்ட ஒருங்கிணைப்பாளர் ராவ் கெலுஸ்கர், திட்ட பொறுப்பாளர்கள் ஜெயலட்சுமி, சரண்யா, மாணவிகள் சுகந்தி, பவானி, தீபா, குரு சுபலட்சுமி, ஜெயஸ்ரீ, ஜீவபாரதி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர். தொடர்ந்து பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE