மின் விளக்கு அமைக்க மனமில்லாத அதிகாரிகள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மின் விளக்கு அமைக்க மனமில்லாத அதிகாரிகள்

Added : பிப் 20, 2021
Share
பேரூர்:மாதம்பட்டி - தொண்டாமுத்துார் ரோட்டில், தெருவிளக்குகள் இல்லாததால், வாகன ஓட்டிகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது.மாதம்பட்டி - தொண்டாமுத்துார் ரோடு, மூன்று கி.மீ., நீளம் கொண்டது. அதில், நான்கு அபாய வளைவுகள் உள்ளன. தொண்டாமுத்துார் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு இந்த ரோடு மிக முக்கியமானது. அத்தகைய ரோட்டில், பல இடங்களில்
 மின் விளக்கு அமைக்க மனமில்லாத அதிகாரிகள்

பேரூர்:மாதம்பட்டி - தொண்டாமுத்துார் ரோட்டில், தெருவிளக்குகள் இல்லாததால், வாகன ஓட்டிகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது.மாதம்பட்டி - தொண்டாமுத்துார் ரோடு, மூன்று கி.மீ., நீளம் கொண்டது. அதில், நான்கு அபாய வளைவுகள் உள்ளன. தொண்டாமுத்துார் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு இந்த ரோடு மிக முக்கியமானது. அத்தகைய ரோட்டில், பல இடங்களில் தெருவிளக்குகள் இல்லை; இருந்தாலும் எரிவதில்லை. அதனால், இரவு நேரங்களில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துகளில் சிக்குகின்றனர்.ரோட்டில் வளைவான பகுதிகளில் மறைந்து நிற்கும் மர்ம ஆசாமிகள், வாகன ஓட்டிகளை மறித்து மொபைல் போன், பணத்தை வழிப்பறி செய்வதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள், விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X