சிவகங்கை கோட்டாட்சியர் அலுவலகத்தின் கீழ் சிவகங்கை, திருப்புவனம்,மானாமதுரை, இளையான்குடி ஆகிய நான்கு தாலுகாக்கள் உள்ளன. இப்பகுதியில் பிறப்பு, இறப்பு ஏற்படும்பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்கள் 21 நாட்களுக்குள் அந்தந்த பகுதி வி.ஏ.ஓ.,க்களிடம் பெயர்களை பதிவு செய்து, சான்று பெற வேண்டும்.
அங்கு உரிய நேரத்தில் சான்று பெறாத பட்சத்தில்கோட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்து உரிய விசாரணைக்கு பின், சான்று வழங்கப்படும்.அந்த வகையில் 2018 முதல் பிறப்பு, இறப்பு சான்று கோரி சிவகங்கை கோட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்து, பலர் காத்திருக்கின்றனர். இங்கு சான்று வழங்குவதில் தாமதம் ஏற்படுவதால், சொத்து பரிமாற்றம், கல்வி மற்றும் வேலை வாய்ப்பு தொடர்பாக சான்று கிடைக்காமல் விண்ணப்பதாரர்கள் அவதிக்குள்ளாகின்றனர்.
தற்போது வரை இங்கு 500க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் காத்திருப்போர் பட்டியலில் உள்ளன.சான்றுக்கு சிறப்பு முகாம்சிவகங்கை கோட்டாட்சியர் முத்துகழுவன் கூறியதாவது: 2018ம் ஆண்டில் இருந்து 2019 வரை விண்ணப்பித்தோருக்கு, சிறப்பு முகாம் நடத்தி சான்று வழங்கப்பட்டுள்ளன.எஞ்சிய விண்ணப்பதாரர்களுக்கு வாரத்தில் 3 நாட்கள் சிறப்பு முகாம் நடத்துகிறோம். அதன் மூலம் உரிய விசாரணை செய்து சான்று வழங்கப்பட்டு வருகிறது, என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE