சிவகங்கை: சிவகங்கையில் காவிரி கூட்டு குடிநீர் திட்ட விரிவாக்க பணிகளுக்கானபூமி பூஜை நடந்தது. கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமை வகித்தார்.அமைச்சர் பாஸ்கரன் முதற்கட்ட பணிக்கான பூமி பூஜையை கேந்திரிய வித்யாலயா பள்ளி அருகே துவக்கி வைத்தார்.மானாமதுரை எம்.எல்.ஏ., நாகராஜன், குடிநீர் வடிகால் வாரிய கண்காணிப்பு பொறியாளர் குணசேகரன், செயற்பொறியாளர் அயினான் முன்னிலை வகித்தனர். எம்.ஜி.ஆர்., இளைஞரணி மாநில துணை செயலாளர் கருணாகரன், ஊராட்சி ஒன்றிய தலைவர்கள் சிவகங்கை மஞ்சுளா பாலசந்தர், துணை தலைவர் கேசவன், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் என்.எம்.,ராஜா, முன்னாள் நகராட்சி தலைவர் அர்ச்சுணன் பங்கேற்றனர்.மாவட்டத்தில் 3 நகராட்சி, 5 பேரூராட்சிகள், 11 ஊராட்சி ஒன்றியங்களை உள்ளடக்கிய 2452 கிராமங்கள் பயன்பெறும் வகையில் ரூ.1752 கோடி மதிப்பிலான 'ஜல்ஜீவன்' கூட்டு குடிநீர் திட்ட பணிகளை துவக்கி வைத்துள்ளனர்.இப்பணிகள் 30 மாதங்களுக்குள் முடிவுற்று, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். இதன் மூலம் 11.39 லட்சம் மக்களுக்கு 49.83 மில்லியன் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்படும். படிப்படியாக இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டு 2051 ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு படி குடிநீர் வினியோகம் செய்யும் விதத்தில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.முன்னதாக காஞ்சிரங்கால், உருளி ஊராட்சியில் மினி கிளினிக் திட்டம், கூட்டுறவு பட்டியில் கூட்டுறவு பால் சங்க கட்டட திறப்பு விழா நடந்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE