கடலுார் : வடலுாரில் பார்வதிபுரம் நகர கூட்டுறவு கடன் சங்கத்தின் புதிய அம்மா மருந்தகம் திறப்பு விழா நடந்தது.
கலெக்டர் சந்திரசேகர சகாமுரி முன்னிலை வகித்தார். அமைச்சர் சம்பத், அம்மா மருந்தகத்தை திறந்து வைத்து, முதல் விற்பனையை துவக்கி வைத்தார். விழாவில், கடலுார் மண்டல இணைப் பதிவாளர் நந்தகுமார், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் இளஞ்செல்வி, சரக துணைப் பதிவாளர் சண்முகம், சங்க செயலாட்சியர் நாகராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.மாவட்டத்தில் ஏற்கனவே கூட்டுறவுத் துறையின் கீழ் 7 அம்மா மருந்தகங்கள் மற்றும் 5 கூட்டுறவு மருந்தகங்கள் என 12 மருந்தகங்கள் செயல்படுகின்றன.
இம்மருந்தகங்களில் வாடிக்கையாளர்களுக்கு 20 சதவீத தள்ளுபடி விலையில், மருந்து, மாத்திரைகள் விற்பனை செய்யப்படுகிறது.வாடிக்கையாளர்கள் நலன் கருதி நேரடியாக வீட்டிற்கே சென்று மருந்துகள் வழங்கும் சேவையும் செயல்படுத்தப்படுகிறது. கடந்த 31ம் தேதி வரை 12 கோடியே 94 லட்சம் ரூபாய் மதிப்பில் மருந்துகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE